பெண் ஏன் மலரானாள்?
பிறந்த இடத்தை விட்டு
பிற இடத்தில்
வாசம் தருவதால்
ஒரு மலரேனும்
செடியோடு வாழ்வதில்லை
வாழ்ந்தாலும் வையகம்
வாழ்த்துவதில்லை
சூரியனை கண்டு
சிலிர்க்கும் காந்தி போல
சூரனைக் கண்டு
மனம் மயங்குவதாலே
சூரியன் சூடானால்
வாடும் மலர்போல
சூரன் சுடுசொல்லில்
முகம் வாடுவதாலே
வாசம் எவ்வளவு வீசினும்
தாங்கி கொண்டாட
காம்பும் கணவரும்
வேண்டும் என்பதாலே
பூஜை முடிந்த பின்னே
புறம் தள்ளப்படுவதாலே
மலரும் பெண்ணும்
ஒன்றானாள்
சூழ்கொண்டு தலைமுறை
வளர்ப்பதாலும்
மொட்டை தன் நிழலில்
வைத்து காப்பதாலும்
வாசம் தந்து ஓய்ந்ததும்
வாடி உதிரும் மலர்போல
பேறு ஈன்றபின்னே
வடிவம் மாறி
வதங்குதாலே
மலரும் பெண்ணும்
ஒன்றானாள்
Nice one 👌💥
ReplyDeleteThank you
Delete