Tuesday 16 November 2021

ஆலமரம்

பலமொழியில் பாடி
மனமயக்கும் 'பாரு'
பீரே குடிக்காமல்
போதையேற்றும் குயிலு 

வேராய் இருந்தாலும்
வெளிய வந்து சிலநேரம்
விழுதோடு விளையாடி
நகையாடும் கிளி 

நடப்பதையெல்லாம்
மௌனமாய் ரசித்து
அடக்கிவாசிக்கும் 
அக்கரை காகங்கள் 

காடையை காணோம்
கவுதாரியை காணோம்
மயில் எங்கே கிளி எங்கே
கணக்கெடுக்கும் கொக்கு


வேலை பளு அதிகமாக
வீட்டுகாரர் காரமாக
ஆசுவாசப் படுத்த
பாய்ந்து வரும் மைனா 

உமையாள் மகா ஈஸ்வரி 
திரிந்து உமாமகேஸ்வரி 
ஆனதை போல
மோகமும் மோகனமும் 
திரிந்து சீர்கெட்டு 
தவிக்கும் செங்குருவி 

கண்டம் தாண்டி
பறந்து வரும்
அமெரிக்கா குருவி
ஆலம்பழம் சாப்பிட்டு
ஆட்டு பிரியாணி பங்கிட்டு
திரும்பி போகும் குருவி 

இளைப்பார நினைக்கும்
பலவித பறவைகள்
பறந்துவந்து
பார்ட்டி தந்து
பாடி ஆடி பறக்கும் 

பிறந்த நாளோ
கூட்டை விட்டு 
பறந்தநாளோ
அத்தனைக்கும் 
வாழ்த்துப் பா
தவறாமல் வந்து பாடும் 

சிலநேரம் கப்சிப்
இலையுதிர் காலம் 
பலநேரம் வளவள
வசந்தகாலம்


டிஜிட்டல் ஆலமரம்
'டி' ப்ளாக் என்று பெயர்

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...