Wednesday, 18 May 2022

கலக்கம்


பொதுவெளியில் 
வெட்கமின்றி
அன்பின்பிரகடனம்
அசிங்கமாய் இருந்தது.
சரியா தவறா
குழப்பமாய் இருந்தது
யார்யார் என்னென்ன
நினைத்திருப்பர்
அசடு அறிவிலி
அலைபவள் வழிபவள் 

வழிகாட்டும் திசைகருவி
திசை மாறிப்போனேன்
உயர்பதவி நல்வாழ்வு
அத்தனையும் மறந்தேன்
காதலா கவர்ச்சியா
உன் அறிவா அழகா
எது உன்னிடம் இழுக்கிறது
உன்சரியும் என்சரியும்
ஒத்துப்போவதாலா
அலைவரிசை ஒருகோட்டில்
பயணிப்பதாலா
விருப்பும் வெறுப்பும்
ஒன்றானதாலா
நீ தவிர்ப்பதும்
தள்ளி இருப்பதும் 
இருவரின் நன்மைக்கா
இல்லை நீ உயரத்தில்
இருப்பதாக எண்ணிக்
கொள்வதாலா
எதுவோ இருக்கட்டும்
நீ நலமாக வாழு!
                     - யாரோ 

No comments:

Post a Comment

அரசவை நிகழ்வு

சேரநாட்டு அரசவையில் ஆலோசனை நடந்தது! குளிர்பதன ஆலைக்கு பொறுப்பாளர் தேர்வு அனுபவமிக்க சிப்பாயை சேனாதிபதி பரிந்துரைத்தார்! சிப்பாயோ ...