Thursday, 24 November 2022

துப்புரவு தொழிலாளி

பகல்முழுதும்
சாலை சாக்கடை
சுத்தம் செய்தவன்
தன்னுடல் எங்கும்
அழுக்காய் திரிகிறான்
டாஸ்மாக் பரிசு
நடையை தளர்த்தும்
குடும்பம் வளர்கிறதோ
இல்லையோ டாஸ்மாக்
வளர்ச்சி அபாரம்
தன் கழிவறையை
தானே சுத்தம் செய்த
காந்திகள் இல்லாத
தேசத்தால் இந்த வேலை
ஸ்கேவஞ்சர் மெசின்
எல்லா தேர்தலிலும்
வாக்குறுதி பறக்கிறது
கோடீஸ்வரனுக்கு மானியம்
கோடிக்கணக்கில் போகிறது
உனக்கு மெசின்
வாங்கத்தான் அரசிடம்
காசில்லை
இருந்தாலும் நீ தனவான்
உன் காசு தானே
பலருக்கு ஊதியம்
அதென்ன உன்பெயர்
கருப்புசாமி வெள்ளைசாமி
என்றே ஒலிக்கிறது
அய்யர் அய்யங்கார்
முதலியார் செட்டியார்
கேட்டதேயில்லை
பெரியாரே மீண்டும் வா
பாரதியே பிறந்து வா
உங்கள் கடமை
இன்னும் பல உண்டு!

No comments:

Post a Comment

அரசவை நிகழ்வு

சேரநாட்டு அரசவையில் ஆலோசனை நடந்தது! குளிர்பதன ஆலைக்கு பொறுப்பாளர் தேர்வு அனுபவமிக்க சிப்பாயை சேனாதிபதி பரிந்துரைத்தார்! சிப்பாயோ ...