Thursday, 29 December 2022

குறள்: 1133

திமிர் பிடித்த
அரசு காளையை
திண்டு பிடித்து
அடக்கினாய்!

சக்கரம் ஒடிந்த
சமூகநீதி தேரை
சொல்கயிற்றால்
இழுத்துவந்தாய்!

ஊர் ஓரம் நின்ற
தராசு தேவதையை
ஒரு கையால்
தூக்கினாய்!

பலராமன் நீ
பஞ்சுமூட்டை
எனை அள்ள
பலநேரம்
யோசிப்பதேன்?

முத்தம் நிரம்பிய
தலையணையை
மூடி வைத்து
ரசித்தவன்
முத்தம் நூறு
தந்ததால்
மூச்சுமுட்டி
சாய்ந்தவன்

வெட்கம் விடுத்து
வருவானோ
வெண்ணிலாவை
தொடுவானோ

மடலேறி
வருவானோ
வானூர்ந்து
வருவானோ

வழிமீது
விழிவைத்து
வண்ணமயில்
காத்திருந்தேன்!



No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...