Tuesday, 17 January 2023

குறள் 1153

தூங்கி எழுந்ததும்
நான்பார்க்கும்
முதல்முகமும்
தூங்கும்முன்
தேடும்
கடைசிமுகமும்
நீ என
தெரிந்தும்
பிரிய நினைத்தல்
சரியா...

என்னடி
கேட்காமல்
சொல்லுடி
கேட்காமல்
மதிமயங்குவேன்
என தெரிந்தும்
தூரம் செல்வது
சரியா....

உறக்கத்திலும்
உன்தீண்டலை
ரசிப்பவள்
நீ அருகில்
இல்லாமல்
தவிப்பேன்
தெரியாதா....

உன் உஷ்ண
மூச்சுக்காற்று
பட்டுக்கொண்டே
இருக்கத்தானே
சிறியபடுக்கையே
வாங்கினேன்
மறந்தாயா...

இடப்பக்கம்
வலப்பக்கம்
திரும்பி படுத்தால்
முகம் காண
முடியாதென
நேராக
தூங்க சொல்வேன்
மறந்தாயா....

இத்தனை தெரிந்தும்
என் மனம் வாட
பிரிந்து செல்ல
நினைப்பது
எப்படி சரியென்று
விளக்கி சொல்!
Comments :

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...