Wednesday 18 January 2023

குறள் 1154

அஞ்சாதே!
சுகத்திலும்
சுகவீனத்திலும்
பலத்திலும்
பலவீனத்திலும்
உடன் இருப்பேன்
என என்னிடமும்
பாதிரியாரிடமும்
சொன்னாயே
மறந்தாயா
மாமனே!

பதவிஉயர்வும்
பணமும் மதிப்பும்
பெரிதென்று
எனைபிரிய
துணிந்தது
சரியா?

நடுஇரவில்
காய்ச்சல்வந்து
வாந்தியெடுக்கும்
குழந்தையை
மருத்துவரிடம்
அழைத்துசெல்ல
யாரை அழைப்பேன்
அழுதுகொண்டு
உனை நினைப்பேன்
அதை நீ உணர்வாயா?

புதுபுடவை
உடுத்தையிலே
அழகியென்று
ஆசைப்படும்
பக்கத்துவீட்டு
ஆண்மகனை
எவ்வாறு
எதிர்கொள்வேன்
Wouldlike to introduce you
to my club friends
will you come with me?
கேட்கும் சீனியரை
எத்தனைகாலம்
தவிர்ப்பது....
என் பயம்
அறிவாயா?

காய்கறி
நறுக்கிதந்து
காய்ந்ததுணி
மடித்துதந்து
உதவுவேன்
என்று மறுவீட்டு
விருந்தில்
மாமியாரிடம்
சொன்னாயே
குழந்தைபோல
என்தங்கை
பார்த்துக்கோ
சொன்னபோது
கவலைப்படாதே
மச்சான்
நான் இருக்கேன்
என்று அண்ணனிடம்
சொன்னதையும்
மறந்தாயோ?

காப்பதாய்
உறுதி சொன்ன
அத்தனையும்
மறந்து இன்று
பிரிந்துசெல்லல்
நியாயமா?

குற்றம்! குற்றமே!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...