இலையுதிர்காலத்தில்
இலையிழந்து
களையிழந்து
பிரிவால் வாடும்
மரங்களே
ஆணிவேர்
இருப்பதை
மறந்தீரோ
அடுத்த பருவத்தில்
துளிர்விட்டு
செழிக்கவைக்க
நானிருப்பதை
வேர் இருப்பதை
வேர் என
காதல் இருப்பதை
மறந்தீரோ
காதலினால்
மீண்டும்
சேர்வோம்
பிரிவு தற்காலிகமான
பருவநிலை தானே
காத்திருந்து
காதலிப்போம்!
வெயில்காலத்தில்
வறண்டுபோன
குளத்தைகண்டு
கலங்கமாட்டேன்
அடுத்து வருகிறதே
மழைக்காலம்
நிரம்பிவழியும்
நீரில் நான்
இன்பமாக
மிதந்திருப்பேன்
வெயிலும் மழையும்
இயற்கையெனில்
பிரிவும் சேர்வும்
இயற்கைதானே
பிரிவுக்காக நான்
வருந்தபோவதில்லை
வரப்போகும்
இன்பமழைக்காக
காதலோடு
காத்திருப்பேன்!
அரியணையில்
அமரமுடியாமல்
அடுத்தடுத்து
தோற்றாலும்
மக்கள் மீது
கொண்ட நம்பிக்கை
அடுத்த தேர்தலில்
வெல்லவைக்கும்
காதலர் பிரிவும்
அப்படித்தான்
அவர்மீது வைத்த
நம்பிக்கை
அடுத்த வருடத்தில்
இணைந்திட
வழிவகுக்கும்.
தேர்தலில் தோல்வியும்
காதலரின் பிரிவும்
நிரந்தரமானதல்ல!
No comments:
Post a Comment