Monday, 27 February 2023

குறள் 1194


நாள்முழுதும்
வாராத
குறுஞ்செய்தி
சொல்லும்
நான் உனக்கு
முக்கியமில்லை
என்பதை!

தாமதமாய்
வரும் பதிலில்
தெரியும்
என் கேள்விகள்
உனக்கு
பிடிக்கவில்லை
என்று!

என்சொல்லையும்
செயலையும்
பாராட்ட ஆயிரம்
மனிதர்கள்
இருந்தாலும்

ஆன்றோரே
புகழ்ந்தாலும்

நீ சொல்லும்
ஒற்றை வார்த்தை தானே
எனது பொக்கிஷம்!

உன் குரல்தான்
எனக்கு சுப்ரபாதம்
என்றாலும்

Pixel by Pixcel
உனை பிரித்து 
ரசித்தாலும்

உலகம் நீயென
உன்னையே
சுற்றினாலும்

நான் உன்
இதயத்தில்
ராணியில்லை
என்றால்
என்னைவிட
துரதிஷ்டசாலி
யாரும்
இருக்கமுடியாது!

உலகமே 
சொன்னது
நான்
அதிஷ்டசாலி
என்று!

ஆனால் 
உன் இதயம்
நுழையமுடியாத
துரதிஷ்டசாலி
என்பதை
நீயும் நானும்
அன்றி
வேறொருவர்
அறியார்!


No comments:

Post a Comment

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...