Monday, 20 November 2023

அவன்

கனவுகளின்
தொழிற்சாலை
அவன்!

வானம்
தொட்டுவிடும்
தூரம்
என்பான்!

வானவில்லை
மண்ணில்
வளரவைப்பேன்
என்பான்!

பேரரசை
உருவாக்க
பாடுபடும்
பேராசைக்காரன்!!

வரப்போகும்
சந்ததிக்கு
வானமளவு
சேமிப்பானாம்!

வஞ்சியை
தரிசிக்க
வருடத்தில்
ஒருநாளாம்

கொஞ்சியும்
கெஞ்சியும்
வாழ்நாளை
கழிப்பானாம்

அன்பானவன் தான்
கொஞ்சமாக
அசட்டைக்காரனும் கூட

மல்லிகை
வாங்க
மறந்துவிடுவான்

மாளிகை
பரிசளிக்க
மறக்கமாட்டான்

பிறந்தநாளை
மறப்பான்
பிரியும் நாளில்
வாடுவான்

வெளியார்முன்
திட்டாதே என
தனியறையில்
கெஞ்சுவான்

கிறக்கமடி
என்பான்
ஆனால்
என்னை
காத்திருக்க
வைப்பான்!

அன்பு பாதி
ஆசை பாதி
கலந்து செய்த
கலவை அவன்!

உள்ளே குழந்தை
வெளியே அறிவாளி
விளக்கமுடியாத
கவிதை அவன்!

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...