Wednesday, 28 August 2024

கேள்வி

ஆணதிகாரம்

படிக்கட்டு ஓரத்தில்
ஸ்கூட்டி யார் வைத்தது

படிக்கட்டு சன்னலில்
தண்ணீர் கேன்
யார் வைத்தது

பேராசிரியர் வேலை விடுத்து
படிக்கட்டு காவலாளியாக
பணி செய்யட்டுமா?

யார் வருகிறார்
யார் போகிறார்
கண்காணிக்க
எளிதாக இருக்கும்!

Monday, 26 August 2024

சிவாஜி

இந்தியாவின் 
இறையாண்மையை
காக்க முடியாத நான்

இந்தியப் பெண்களை
காக்க முடியாத நான்
 
வாளிருந்தும்
வீரமிருந்தும்
வாய்மூடி கண்மூடி
வாழும் நிலை
வந்ததே எனக்கு

சிலையாய்
வாழ்வதும்
ஒரு வாழ்வா

அதற்குபதில் 
இறந்தால் என்ன
என நினைத்து
உச்சியில் இருந்து குதித்து 
உயிர்விட்டாரோ சிவாஜி?

Wednesday, 7 August 2024

மழை

காய்ந்து கிடந்த என் 
மன நிலத்தில் மழையாய் 
பொழிந்து ஈரமேற்றிய வெண்மேகமே...

இருள்கவ்விய என் 
இரவுக்குள் இன்ப வலியாய் நுழைந்து ஒளியேற்றிய பெண்ணிலவே...

சீரின்றி சிதறித்திரிந்த 
என் சிந்தைக்குள் 
அரவம் இன்றி சரணம் 
இயற்றிய இருங்காட்டுக்குயிலே...

மாலை நேர மித வெயிலில்
குளிர் காயும் கூவிரமலரே ...

மறைந்திருந்து உனை பார்க்கும் 
என் மனமதனை அறிவாயா... ❣️

என்னருகே நீ இருந்தால்...

நெடுந்தூர நடையும் 
சுடும் வெயிலும் கூட
சுகமாகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

மனதை வதைக்கும் 
சோகங்களும் மதியை 
மறைக்கும் சிந்தைகளும்
சீராகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

என்னத்தின் சிதறல்களும் 
ஏக்கங்களின் பிளிரல்களும்
இதம் காணுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

விடியாதிருந்த இரவுகளும் 
விடை தேடிய இருள்களும்
வெளிச்சம் பெருகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

நீ இல்லா நேரமும் கூட 
உன் நினைவுகளால் 
இனிமையாகுது..
நெஞ்சமும் உனை
நினைத்து இசைத்து பாடுது... 🌹

Tuesday, 6 August 2024

சந்தக் கவிதை

நான் 
சலிக்காமல் 
வாசிக்கும் 
சந்தக் 
கவிதையடி.. நீ 

விழிக்குள் 
ஓவியமாய் 
விந்தைக் 
கவிதை யடி!!

மொழிக்குள் 
மோனையாய் 
செழிக்கும் 
கவிதையடி.. அழகே நீ...

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...