Saturday 25 November 2023

தாலாட்டு

விடைகொடுக்கும் விடிவெள்ளி,
திசை காட்டும் துருவ நட்சத்திரம்,
வழிநடத்தும் கலங்கரைவிளக்கம்,
நிலைநிறுத்தும் நங்கூரம்,
துயில் கொடுக்கும் தாலாட்டு,
இனிவரும் வசந்தத்தின் குயில்பாட்டு,
ஒரு உருவில்  எத்தனை பரிமாணங்கள் !

Friday 24 November 2023

யாரோவின் ஒருவன்

புயலில் 
ஆணிவேர் 

வெயிலில்
வேப்பமரம்

குளிரில்
கம்பளி

அவன்!

அழுகையில்
ஆறுதல்

தடுமாற்றத்தில்
தாங்கும் கை

சலிக்கையில்
நம்பிக்கை

அவன்!

நான் படிக்கும்
புத்தகம் அவன்!

என்னை எழுதும்
பேனா அவன்!

சிரிப்பின் 
காரணம் 
அவன்!

கோபத்தின்
வடிகால் 
அவன்!

யாரவன்?

யாரோ ஒருவன்!


Thursday 23 November 2023

அரவணைப்பு

தீஞ்ச்சொல் ஈட்டியை,
பொறுமை கேடயம் தடுக்கும் !
காலம் மருந்திட்டு,
அருகாமை தணிக்கும் !
கடும் கோடை,
வசந்ததிற்கு முன்வாயில்,
காரிருள்,
அதிகாலையின் முகப்பு !
இடிமின்னல்,
பேரன்பு மழைக்கு அடிநாதம் !
காலம் வரும்,
கவலைகள் தீரும்,
தோள் சாய்ந்து,
சுகம் பேசி,
வெண்ணிலவு செல்வோம் !

Wednesday 22 November 2023

அவனின் அவள்

எங்கும் தொடரும்,
Hutch குட்டியே !
நாண குடைகடந்து,
அன்பு மழையில்,
முழுதும் நனைக்கிறாய் !

காலத்தை திருத்தும்,
அழிப்பானை தேடுகிறேன் !
சிதறுண்ட கூடுகள் சேர்த்து,
பெருமாளிகை கட்டுகிறேன் !
உதிர்ந்த மொட்டுக்கள் கொண்டு,
மலர்மாலை தொடுக்கிறேன் !

கரம் கோர்த்து,
கரை நடப்போம்,
காரிருள் கடப்போம்,
கார்த்திகேயன் காண்போம்,
கலைகள் பலபயின்று,
கதைகள் கதைப்போம்,
இந்த பேரன்பை வாழ்நாள்,
எல்லாம் யாசிப்போம் !

Monday 20 November 2023

சிலேடை

சிந்தித்து சிலாகிப்பாள்,
சிலேடைமொழி உரைப்பாள்,
சிலசமயம் மதியுரைப்பாள்,
கண்டால் முறைப்பாள்,
காணாது திகைப்பாள்,
கவிச்சொல் வடிப்பாள்,
சினேகித்து சுவைப்பாள்,
பேசாது இனிக்கும்,
இது ஊடல் அல்ல,
பின்ன என்ன ?

வானவில்

வீட்டுக்குள் வானவில்,
கூட்டுக்குள் வண்ணமயில்,
நிலவொன்று சாளரத்தில்,
நினைவொன்று யாரிடத்தில்!
❤️💐

மழை

பொழியும் அன்பிற்கு,
மருகும் கண்களுக்கு,
தேடும் செவிகளுக்கு,
நேசிக்கும் நெஞ்சத்திற்கு,
என்ன அன்பு செய்வேன் !❤️❤️❤️

நடுக்கம்

பேச்சில் ஏன் நடுக்கம்,
சிந்தையில் ஏன் சுணக்கம்,
வார்த்தைகள் ஏன் வற்றிப்போயின,
தமிழ் எனக்கு வராதோ ?
தாய்மொழி மறக்குமோ ?
மனம் பச்சிளங்குழந்தை தான் !❤️❤️

திராட்சை

அறிவில் ஒளவை,
குணத்தில் காகம்,
பேச்சில் கிளி,
எழிலில் மயில்,
சிந்தையில் நதி,
அன்பில் சோலை,
சுவையில் தேன்,
பழத்தில் திராட்சை,
நீ யார் ?

வீழ்ச்சி

வீழ்த்தி கர்வமானாய்,
வீழ்ந்து பெருமிதமானேன்,
வீழ்ச்சியும் வெற்றியே !
வீழ்ந்தவர் எழவேண்டும்,
சிலசமயம் எழவேகூடாது,
வீழ்ச்சியும் எழுச்சியும்,
எதற்கு என்பது தீர்மானிக்கும்,
வெற்றி எது என்பதை !
வெற்றி கொள் !

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...