Wednesday, 5 November 2025

சுகந்தி

சுகவாசி
சுகபோகி
சுதந்திர தேவி! 

எனது வலியை
அறிந்தவள்
வறுமையை
பகிர்ந்தவள்
செழிப்பில்
மகிழ்ந்தவள்

அகம் புறம்
அனைத்தும்
அறிந்தவள்

உரிமையை
தருவாள்
எடுப்பாள்
என்னிடம்

பேசிப் பேசி
தீர்ப்பாள்
பேசாமல்
தவிப்பாள்!

எனக்காக
என் கணவரிடம்
வாதாடும்
ஒரே
வக்கீல்!

வாகனங்களை
சோதனையிட்டு
ஓட்டுனர்களை
ஓனர்களை
திணர வைக்கும்
கோடீஸ்வரி!

அடுத்த
பிறந்தநாளுக்குள்
ஆர்டிஓ
ஆகிவிட
இந்தப் பிறந்தநாளில்
இறைவனை
வேண்டுகிறேன்.

இனிய
பிறந்தநாள்
வாழ்த்துகள்
சுகந்தி!
❤❤❤💐💐💐

Tuesday, 4 November 2025

மேனகா

எடை கூடாத
இடையழகி!

எள்ளுப்பூ
மூக்கழகி!

தங்க
நிறத்தழகி!

தண்மையான
சிரிப்பழகி!

இவளிடம்
முருங்கையும்
வழிமுறை
கேட்கும்
முத்தாமல் இருப்பது
எப்படியென!

மேனகையின்
மோகனத்தில்
மயங்காத
மயில் உண்டோ?

மூன்றாம் மாடி
ஏறவே
மூச்சிரைக்கும்
தோழியர்
கூட்டத்தில்
டேபிள் டென்னிஸ்
விளையாடி
மாநில அளவில்
உயர்ந்தவள்!

உள்ளத்தை
இல்லத்தை
அழகாக
வைத்திருப்பாள்!

காஞ்சிபுரம்
சேலைகளை
குத்தகையில்
எடுத்திருப்பாள்!

அழகே
அறிவே
நீடூழி வாழ்க!

இனிய
பிறந்தநாள்
வாழ்த்துகள்
மேனகா!

❤❤❤

சிலை
ஏன்
கோவிலுக்கு
வெளியே 
நிற்கிறது?

இதுதான்
இக்கோவிலின்
சிறப்பம்சமோ? 

😄😄😄


Monday, 3 November 2025

கௌசி - வசு : இரட்டையர்

புளியங்காயும்
மாங்காயும்
வெள்ளரிக்காயும்
இலந்தைப்பழமும்
கல்லில் கொட்டி
உப்பும் மிளகாய்ப்பொடியும்
போட்டு
பகிர்ந்துதின்ற
இளமைப்பருவம்!

பத்தாம்வகுப்பு
பன்னிரெண்டாம் வகுப்பு
அரசுத்தேர்வு
பயத்தை
பாடக்குறிப்புகளை
பகிர்ந்துகொண்ட
பள்ளிப்பருவம்!

கல்லூரியில்
பட்டாம்பூச்சியாய்
சிறகடித்து
பறந்ததுவரை
எத்தனை எத்தனை
நினைவுகளின் சேமிப்பு
இருவருக்கும்!

போதாது என்று
திருமணத்திற்கு
பின்னும்
தக்காளியும்
சுரைக்காயும்
கறிவேப்பிலையும்
வெண்டைக்காயும்
அன்றாடம்
கைமாற்றும்
மகாபாக்கியசாலிகள்
கௌசியும் வசுவும்!

வேர்கள் அற்ற
வேற்றுமண்ணில்
வேராகவும்
நீராகவும்
ஒருவருக்கொருவர்
ஆதரவு!

முன்ஜென்ம பலனோ
முன்னோர்கள் வாழ்த்தோ
ஏதோ ஒன்று
பாலமாக்கி
இணைத்தது
இவ்விருவரை!

இன்னும் பல்லாண்டு
இருவரும்
இணைந்திருந்து
நட்புக்கு இலக்கணம்
எழுதிடுவீர் இருவரும்!

💐💐💐❤❤❤


Thursday, 30 October 2025

பூங்கொடி

பிரியாணியை
நேசிக்கும்
பெண்ணும் நீ!

பிரியாணியே
நேசிக்கும்
பெண்ணும் நீ! 

அலுவலகத்தில்
மேலதிகாரி
திட்டினாரா
பிரியாணி!

வீட்டில்
ஆத்துக்காரர்
திட்டினாரா
பிரியாணி!

விசேஷம்
இருந்தாலும்
பிரியாணி!

விசேஷம்
இல்லையென்றாலும்
பிரியாணி! 

பிரியாணி ப்ளூஸ்
ஷேர் விலை
பூங்கொடியால் தான்
ஏறியதாக
நம்பத்தகுந்த
வட்டாரங்கள்
சொல்கின்றன
ஸ்ரீஜா.... 😂😂😂

சாரி பூங்கொடி... 😂😁😁

Monday, 27 October 2025

அம்மு எனும் அம்மா

அம்மா
தேடாதவரை
எதுவும்
தொலைவதில்லை

அம்மு
சொல்லாதவரை
தரவு
தொலைவதில்லை

பிறந்தநாள்
திருமணநாள்
நிழற்படம்
என
அத்தனையும்
சேகரித்து
தேவைப்படும்போது
தரும்
தரவுப்பெட்டகம்.

நினைவுத்
துகள்களாய்
எங்களை
சுமந்து
அவ்வப்போது
மகிழ்ச்சி
துளிகளைத்
தூவும்
தரவுமேகம்!

இன்பத்தை
எமக்கு அருளி
துன்பத்தை
தனியாக
எதிர்கொண்ட
தைரியசாலி!

அம்மாக்களுக்கு
அம்மா ஆன
அம்மம்மா
எங்கள் அம்மு!

❤❤

விஜி

உன் வீட்டு
சமையலறை
நாடாளுமன்றமா
விஜி?

எல்லாருக்கும்
இட ஒதுக்கீடு
சரிசமமாக
தந்துள்ளாய்!

வெண்டைக்காய்
கத்தரிக்காய்
ராஜ்மா
கருணைக்கிழங்கு
பாகற்காய்
துவையல்
ரசம்
புளியோதரை
என்று
எல்லோருக்கும்
காய்கறித்தொகை
கணக்கெடுப்பு
நடத்தினாயா?

கறியும் காயும்
சரிசமமாக
பங்கி
பொதுவுடைமைக்
கொள்கையை
சமையலறையில்
ஆரம்பித்தாய்! 

Sunday, 26 October 2025

விஜய கௌரி

கன்னத்தில் 
ததும்பிய
இளஞ்சிவப்பை
கடனாகத்
தந்தாள்
கௌரி! 

தரைக்கும்
தாரைவார்த்து
மலருக்கும்
கலர் தந்தாள்! 

Saturday, 25 October 2025

கௌரி சிவில்

இரண்டு 
இன்னிசை
அளபெடைக்கு
சொந்தமானவள்

கருவறையான
கல்லூரிக்கு
சேவை செய்யும்
பாக்கியம் பெற்றவள்! 

தொழிலில்
உச்சம் தொட்ட 
தென்றல் மொழியாள்
கௌரிக்கு இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் 

💐💐💐

Friday, 24 October 2025

சிவா

ஜோதியின்
கரம் 
பட்டதும்
வெட்கத்தில்
சிவந்தது
சேலை! 😄❤

சேலை
மனசுல
சிவா! 😁 

Sunday, 19 October 2025

இந்துமதி ஈசிஈ

இந்துவுக்கு
பிறந்தநாள்
வாழ்த்து சொல்ல
முப்பத்து முக்கோடி
தேவர்கள்
கோபுரத்தில்
வரிசையில்
கையுயர்த்தி
நிற்கின்றனர்! 

😍😍😍

வாழ்த்துகள் இந்து! ❤💐

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...