Thursday 8 December 2022

குறள் - 1113 : முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்,வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

என்னவளே
மூங்கில்
நேற்று
முறையிட்டது
உன் அழகிய
தோள்களுக்கு
முதல் பரிசாமே
பாவம் மூங்கில்
ஆறுதல் பரிசும்
தவறவிட்டதாமே
இணைப்பு
கணுக்கள்
இறக்கிவிட்டனவோ
மூங்கிலுக்கு பரிசை
ஜூரியில் என்ன
காவிக்காரர்களா
பச்சை நிற
மூங்கிலை தவிர்த்து
உன் மஞ்சள்
நிற தோளை
தேர்வு செய்தனர்
என்னை போலவே
அவர்களும்
உன் தோள்வழி
வழுக்கிவிழுந்தனரோ

முத்து வந்து
என்னிடம்
கேட்டான்
உன் காதலி
எத்தனை வருடம்
சிற்பிக்குள்
இருந்தாள்
இவ்வளவு
வெண்மையாய்
அவளின் பற்கள்
கடலோரத்தில்
உன் சிரிப்பை
பார்த்தானோ

நந்தியாவட்டையுடன்
என்ன தகராறு
அது வந்து
சிலிர்த்தது
நான்தரும்
மையால் தான்
உன்காதலியின்
கண்கள் அழகானது
மறக்கவேண்டாம்
என்று சொல்ல
சொன்னது

பஞ்சுவும்
இழுத்தது
பஞ்சாயத்து
உன் மேனி
அதைவிடவும்
மென்மையாமே

என்னை மட்டும்
வதைக்காமல்
எல்லோரையும்
மல்லுக்கு
அழைக்கிறாய்
நான் எத்தனை
பேரை சமாதானம்
செய்வேன்?

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...