Monday, 27 October 2025

விஜி

உன் வீட்டு
சமையலறை
நாடாளுமன்றமா
விஜி?

எல்லாருக்கும்
இட ஒதுக்கீடு
சரிசமமாக
தந்துள்ளாய்!

வெண்டைக்காய்
கத்தரிக்காய்
ராஜ்மா
கருணைக்கிழங்கு
பாகற்காய்
துவையல்
ரசம்
புளியோதரை
என்று
எல்லோருக்கும்
காய்கறித்தொகை
கணக்கெடுப்பு
நடத்தினாயா?

கறியும் காயும்
சரிசமமாக
பங்கி
பொதுவுடைமைக்
கொள்கையை
சமையலறையில்
ஆரம்பித்தாய்! 

No comments:

Post a Comment

அம்மு எனும் அம்மா

அம்மா தேடாதவரை எதுவும் தொலைவதில்லை அம்மு சொல்லாதவரை தரவு தொலைவதில்லை பிறந்தநாள் திருமணநாள் நிழற்படம் என அத்தனையும் சேகரித்து த...