Wednesday, 5 November 2025

சுகந்தி

சுகவாசி
சுகபோகி
சுதந்திர தேவி! 

எனது வலியை
அறிந்தவள்
வறுமையை
பகிர்ந்தவள்
செழிப்பில்
மகிழ்ந்தவள்

அகம் புறம்
அனைத்தும்
அறிந்தவள்

உரிமையை
தருவாள்
எடுப்பாள்
என்னிடம்

பேசிப் பேசி
தீர்ப்பாள்
பேசாமல்
தவிப்பாள்!

எனக்காக
என் கணவரிடம்
வாதாடும்
ஒரே
வக்கீல்!

வாகனங்களை
சோதனையிட்டு
ஓட்டுனர்களை
ஓனர்களை
திணர வைக்கும்
கோடீஸ்வரி!

அடுத்த
பிறந்தநாளுக்குள்
ஆர்டிஓ
ஆகிவிட
இந்தப் பிறந்தநாளில்
இறைவனை
வேண்டுகிறேன்.

இனிய
பிறந்தநாள்
வாழ்த்துகள்
சுகந்தி!
❤❤❤💐💐💐

Tuesday, 4 November 2025

மேனகா

எடை கூடாத
இடையழகி!

எள்ளுப்பூ
மூக்கழகி!

தங்க
நிறத்தழகி!

தண்மையான
சிரிப்பழகி!

இவளிடம்
முருங்கையும்
வழிமுறை
கேட்கும்
முத்தாமல் இருப்பது
எப்படியென!

மேனகையின்
மோகனத்தில்
மயங்காத
மயில் உண்டோ?

மூன்றாம் மாடி
ஏறவே
மூச்சிரைக்கும்
தோழியர்
கூட்டத்தில்
டேபிள் டென்னிஸ்
விளையாடி
மாநில அளவில்
உயர்ந்தவள்!

உள்ளத்தை
இல்லத்தை
அழகாக
வைத்திருப்பாள்!

காஞ்சிபுரம்
சேலைகளை
குத்தகையில்
எடுத்திருப்பாள்!

அழகே
அறிவே
நீடூழி வாழ்க!

இனிய
பிறந்தநாள்
வாழ்த்துகள்
மேனகா!

❤❤❤

சிலை
ஏன்
கோவிலுக்கு
வெளியே 
நிற்கிறது?

இதுதான்
இக்கோவிலின்
சிறப்பம்சமோ? 

😄😄😄


Monday, 3 November 2025

கௌசி - வசு : இரட்டையர்

புளியங்காயும்
மாங்காயும்
வெள்ளரிக்காயும்
இலந்தைப்பழமும்
கல்லில் கொட்டி
உப்பும் மிளகாய்ப்பொடியும்
போட்டு
பகிர்ந்துதின்ற
இளமைப்பருவம்!

பத்தாம்வகுப்பு
பன்னிரெண்டாம் வகுப்பு
அரசுத்தேர்வு
பயத்தை
பாடக்குறிப்புகளை
பகிர்ந்துகொண்ட
பள்ளிப்பருவம்!

கல்லூரியில்
பட்டாம்பூச்சியாய்
சிறகடித்து
பறந்ததுவரை
எத்தனை எத்தனை
நினைவுகளின் சேமிப்பு
இருவருக்கும்!

போதாது என்று
திருமணத்திற்கு
பின்னும்
தக்காளியும்
சுரைக்காயும்
கறிவேப்பிலையும்
வெண்டைக்காயும்
அன்றாடம்
கைமாற்றும்
மகாபாக்கியசாலிகள்
கௌசியும் வசுவும்!

வேர்கள் அற்ற
வேற்றுமண்ணில்
வேராகவும்
நீராகவும்
ஒருவருக்கொருவர்
ஆதரவு!

முன்ஜென்ம பலனோ
முன்னோர்கள் வாழ்த்தோ
ஏதோ ஒன்று
பாலமாக்கி
இணைத்தது
இவ்விருவரை!

இன்னும் பல்லாண்டு
இருவரும்
இணைந்திருந்து
நட்புக்கு இலக்கணம்
எழுதிடுவீர் இருவரும்!

💐💐💐❤❤❤


சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...