Saturday, 24 September 2022

Suffering is a choice

Suffering is a choice

Why do you choose suffering?
When comfort is  before you...
Whom to you fight for?
Whose to you fight for?

Cross the corruption
Like another passerby
Cross the injustice
Like another middleclass
Why do you  fight
against the system?

No medal you will get
No crown you will get
No appreciation you will get
Then why  choose suffering?
What drives you to oppose?
What force you to shoutout?

Timely sleep is one choice
Tasty food is another choice
Outing at your owntime
Wearing colourful as you wish
All these choices striken off
Why you choose suffering?

Beef briyani not at time
Soft pillow not at bed
No guffaw with friends
No netflix on your wall
All you know very well
Still you choose suffering
                  
                      -  Yaaro De



Saturday, 17 September 2022

Jokes

மாம்:   ஏலே கரிகாலா, சவுக்க எங்கனாச்சும்          கண்டையா?

ககா:   ஊர்திண்ணைல பெலிக்ஸ் கூட அரட்டை அடிச்சுட்டு இருக்காரு பெரியம்மா!

மாம்:   வூடே தங்கறதில்ல. வரட்டும் இன்னைக்கு காலை ஒடச்சு அடுப்புல வைக்கிறேன்!

Felix : மச்சி, பிரியாணி சாப்பிடனும் போல இருக்கு

Whip : ஆட்டைக் காணோம்! தேடிட்டு இருக்கேன். கிடச்சுதும் போட்ருவோம் மாப்ள!.
கருத்தோடு வேறுபட்டும்
உடன் நடக்கும் கால்கள் வேண்டும்
எப்போதும் யாதினிலும்
குறை சொல்லா வாய் வேண்டும்
உடல் வலிக்கும்போது
பிடித்துவிடும் கைகள் வேண்டும்
பணம் கேட்க மட்டும் அழையா
உறவுகள் வேண்டும்.
உள்ளூர் விருந்தில்
உடன் அழைத்துசெல்லும்
கணவன் வேண்டும்

Secret

ஏழு ஸ்வரங்களும் உன் குரலாகுதே
இரண்டு கண்கள்  தீயாய்  சுடுதே
நவ கிரகங்கள் நீயாக சுற்றுவேன்
பூஜ்யம் நானும் ராஜ்ஜியம்  ஆள்வேன்
எட்டு திசையும் முரசொலி கேட்க
நவ துவாரமும் உனையே யாசிக்க
ஒன்று படும் நாள் எப்போது வருமோ
ஜீரோ வாட் நானும்  LED  நீயும்
மூன்று முடிச்சால் இணைவோம்
எட்டு வைத்து ஓடி வா கண்ணே!

சிறுத்தைப்பா

சிறுத்தைப்பா

வேகமாய் ஓடிவா
விவேகமாய் பேசவா
இனம் தனை காக்கவா
மானம் தனை போற்றவா
கல்விகொண்டு உயரவா
கேள்விகேட்டு துளைக்கவா
சிறுமை கண்டு பொங்கவா
சிறுத்தையே சீறிவா

கூட்டமாய்  காவல் செய்
காட்டமாய் கோபம் செய்
தாய்தங்கை காத்திட
சகோதரன் வாழ்ந்திட
சமத்துவம் தழைத்திட
சமூகநீதி ஓங்கிட
சுற்றுசூழல் போற்றிட
சுரண்டலை ஒழித்திட
வேகமாய் ஓடிவா
விவேகமாய் பேசவா

உணவால் பிரியோம்
உணர்வால் பிரியோம்
சாதியால் பிரியோம்
வேதத்தால் பிரியோம்
அற்பரால் வீழோம்
ஆரியத்தால் அழியோம்

S.Deivanai

ஆசான்

சோபாவும்  பெட்டும்
உணவு சிதறி கிடக்கும்
துணி வைக்கும் ஏரியா
அலங்கோலமாய் கிடக்கும்
மாற்று ஜோடி செருப்புகள்
அங்கொன்றும் இங்கொன்றும்
அந்த ஏசியை போடுப்பா
அதிகாரம் பறக்கும்
அத்தனை சோம்பேறி
அம்மாவின் வீட்டில்

காதல்கொண்டு போன
தோழி வீட்டை தட்டினேன்
அத்தனையும் நேர்மாறாய்
வாசமான காபி தந்தாள்
முறுகலாய் தோசை தந்தாள்
நீயா இப்படி எப்படிடீ என்றேன்
காதல் கற்று தரும்
உனக்கு புரியாது போடி என்றாள்

ம்ம்ம்ம். காதலும் ஆசானே
கற்றுக்கொண்டேன் தோழி

கோபம்

#கோபம்

நேரில் அமர்ந்து
பேசவில்லை
தேடிவந்தேன்
தள்ளிவிட்டாய்
கூட்டம் கூட்டி
திட்டி தீர்த்தாய்
கொன்றுவிடுவேன்
ஆவேசம் காட்டினாய்
எனக்கு தெரிந்ததை
செய்தேன் பேசினேன்
உனக்கு ஏனோ
புரியவில்லை
பிடிக்கவில்லை
எனை துண்டுகளாக
சிதறச்செய்தாய்
ஆனந்தம் பிரபா
அதையும்  ஏற்கிறேன்.
நாளை என்மகன்
தடுமாறும்போது
வழிகாட்டவேணும்
அன்பு செய் அவனிடம்
என்மீதான கோபம்
என்னோடு போகட்டும்
     இப்படிக்கு
     ராஜீவ்காந்தி

Tuesday, 2 August 2022

சிறகு விரிப்பவன்

வானம்பாடி

பறவைகளும் விலங்குகளும் பசி அடங்கியதும் உறக்கம் கலைந்ததும் பறக்க ஆரம்பித்துவிடுகின்றன. அடுத்த வேளை உணவை சேமித்து வைப்பதில்லை. அவ்வப்போது இரை தேடி உண்டு ஓய்வெடுத்து மகிழ்கின்றன. கூடுகளும் கூடல்களும் நிரந்தரமில்லை. தேவை முடிந்ததும் பறக்கின்றன. நீயும் அப்படித்தான் மாமா. மனித உரு கொண்ட வானம்பாடி. சுமைகளை விரும்புவதில்லை. மகிழ்ச்சியாய் சிறகடிக்க விரும்புகிறாய். உன் பயணம் இனிதே தொடரட்டும்.

ஆனால் மற்றவர் நினைக்கும் அளவுக்கு நீ கோபக்காரனும் இல்லை. கொடுமைக்காரனும் இல்லை. புலித்தோல் போர்த்திக்கொண்ட குழந்தை மனதுக்காரன். உன் கர்ஜனை எல்லாம் போலி. அந்தந்த நிமிடத்து நியாயக்காரன். உள்ளுக்குள் மிருதுவானவன். வெளிப்பார்வைக்கு கடினமானவன்.
Material science பாடத்தில் Case hardening என்ற வார்த்தை வரும். Gears are subjected to this process. To withstand friction & wear only top surfaces are case hardened. But the core will be soft enough to receive vibrations during running. நீயும்அப்படித்தான். Case hardened material. 

Tuesday, 26 July 2022

வீரன்

மறவன் என்பதா
துறவன் என்பதா
மதியோன் என்பதா
மதியான் என்பதா
வேந்தனையும் வீழ்த்தும்
வேடன் என்பதா

என்னென்று  அழைப்பதோ
எங்கனம் புகழ்வதோ

வாழிய நின்புகழ்!
வாழிய நின்நலம்

Thursday, 26 May 2022

நான் யார்

நான் யார் ? 

பதிலே வராது என
தெரிந்தும் கேள்விகேட்கும்
முட்டாள் நான் 

படிப்பாயா என தெரியாமல்
பதிவு செய்யும்
பைத்தியம் நான் 

படிக்காதது போல் நீ
நடிப்பது தெரிந்தும்
பின்தொடரும்
முட்டாள் நான் 

உதாசீனம் செய்வது
உணர்ந்தும் உனை
உதறிவிட மறுக்கும்
தாய் நான் 

நீண்ட நெடிய
பெருமூச்சு விடும்போது
இவன் போகட்டும் வெளியே
ஆசைப்படுகிறேன் 

அடுத்த நொடியில்
உள்நுழைந்து
உயிர்காற்றாய்
நிறைகிறாய் 

நான் ஏன் இப்படி
நிலையில்லாமல்
தவிக்கிறேன் 

நான் யார் புரியவில்லை
உனக்கு தெரிந்தால்
சொல்லேண்டா! 

யாரோ !

புன்னகை

சர்க்கரை அளவு  குறைந்தால் சாக்லேட் தேடும் சர்க்கரை நோயாளி போல ரத்த அழுத்தம்  குறைந்தால் காபி குடிக்கும் குறை ரத்த அழுத்த நோயாளி ...