Saturday, 25 March 2023

மோதி அந்தாதி

ஜனநாயகத்தை
விழுங்கும்
கிரகணமே
போற்றி போற்றி

வாய்சொல்லில்
வீரனே போற்றி போற்றி
வடைமாலை
நாயகனே
போற்றி போற்றி

பொய்மொழி வேந்தனே
போற்றி போற்றி
பொறாமையில்
தகிப்பவனே
போற்றிபோற்றி

கொலைவெறி
கொண்டவனே
போற்றி போற்றி
தலைவலியாய்
வந்தவனே
போற்றி போற்றி

இந்தியாவை
சீரழிக்கும்
ஏழரையே போற்றி
அதானியை
வாழவைக்கும்
அடிமுட்டாளே போற்றி

வஞ்சம்நிறை வேந்தனே
போற்றி போற்றி
வறுமையை
தந்தவனே
போற்றி போற்றி

எதேச்சதிகார எச்சமே
போற்றி போற்றி
எல்லோரையும்
வாட்டி வதைக்கும்
ஈனப்பிறவி
போற்றி போற்றி

நாளொரு அலங்காரம்
பொழுதொரு நாடு சுற்றும்
நடிகனே போற்றி போற்றி

எதிர்ப்போரை எல்லாம்
நசுக்கி புதைக்கும்
எமனே போற்றி போற்றி

சனியனே போற்றி
சகுனியே போற்றி
பீடையே போற்றி
பீளையே போற்றி
பிள்ளை உண்ணும்
சுடுகாட்டு முனியே போற்றி
ஆணவ மனிதா போற்றி
அகங்கார மிருகமே போற்றி

Friday, 24 March 2023

குறள் : 1219

கனவு இனிக்கும்
கண்டுபார் பெண்ணே

வங்கிக் கணக்கில்
லட்சங்கள் 
வந்ததாய்
கனவு காண்
இனிக்கும்

எரிவாயு விலை
நானூறு என்று
கனவு காண்
இனிக்கும்

பிரதமர் பதவியில்
அமரும் ராகுலுக்கு
முதல் மாலை
மோதி அணிவிப்பதாய்
கனவு காண்
இனிக்கும்

3% GDP வளர்ச்சியை
8% GDP வளர்ச்சியாய்
கனவுகண்டு சங்கிகள்
இன்புறுவதை போல

இரண்டு ஆண்டுகள்
சிறைதண்டனை
விதித்தால்
ராகுலின் வாயை
அடைத்துவிடலாம்
என கனவுகண்டு
இன்புறும்
ஆட்சியாளரைப்போல

ஒலிபெருக்கியை
சபையில் மறுத்தால்
ஒட்டுமொத்த
இந்தியாவும்
அமைதியாகும்
என்று கனவு காணும்
அற்பரை போல

உன் காதலர்
கனவில் வந்து
உனை கொஞ்சி
மகிழ்வதாய்
கனவு காண்
பேதைப்பெண்ணே

கனவில் நடப்பவை
ஒருநாள் நனவிலும்
நடக்கும் ஆகவே 
கனவு காண்!

Saturday, 18 March 2023

ஆணின் உறுதிமொழி

வாழ்வில் 
உங்களை
தாக்கவரும்
அனைத்து 
அம்புகளில்
இருந்தும்
உங்களை
காப்பேன்

வறுமை
வெறுப்பு
தீயோர் கண்
நோய்கள்
பயம்
வெறிகொண்ட
மனிதர்கள்
மிருகங்கள்

இல்லாமை
கல்லாமை

என
எந்தவகையில்
தீங்கு வந்தாலும்

என்னையே
நான் தந்து
இருந்தேனும்
இறந்தேனும்
உங்களை
காப்பேன்!

Friday, 17 March 2023

குறள் 1212




விட்டால்போதும்
வாயாடிபேச்சு
தாங்கலை
என்றுதானே
வேலையை
காரணம்காட்டி
மாறுதல்
வாங்கி
போனேன் 
தூரமாக!

இப்போது
கனவில் வந்தாலும்
உன்துயர் சொல்லி
புலம்புவேன்
என்கிறாய்
நானெல்லாம்
வரமாட்டேன்
போடி.........
நீயாச்சு......
உன் புலம்பலாச்சு..
குறுஞ்செய்தி
அனுப்பினார்
காதலர்!

சோகங்கள் 😔😔😔

Tuesday, 14 March 2023

குறள் : 1209

உன்னிடம்
எதாவது நான்
பேசமாட்டேனா
என்று ஏங்கிய
காலம்  மறந்தாய்
என்னசொல்லி
பேச்சை
ஆரம்பிப்பது
என தினம்
ஒருவிதம்
தேடி பேசுவாய்
நீ பேசலனா
நாளே போகலடி
என்று புலம்புவாய்
குட் மார்னிங்
சொல்லவில்லை
என்று இரண்டுநாள்
மூஞ்சியை 
தூக்கிவைத்திருந்தாய்
எனை உன்
சுவாசக்காற்றென்றாய்
உன் காகிதத்தில்
எழுத்தாகும்
மை என்றாய்
உன்போனுக்கு
நான்தான்
தீராத சார்ஜ்
என்றாய்
மோதிஅதானி
உறவைக் காட்டிலும்
மேலான ஆழம்
நம் காதல்
என்று வக்கனை
பேசினாய்

அத்தனையும்
மறந்து எனை 
பித்தாக்கி
சுற்றவைத்தாய்!
உன்னை அளவற்று
நேசித்ததை தவிர
அப்படி என்னடா
தவறு செய்தேன்?

Monday, 13 March 2023

block unblock

பேசவே கூடாது....காயவிடணும்
Block....

Sorry சொல்வானோ...
Unblock.....

Sorry கூட சொல்லலை பாரேன்....
Block........

சாப்பிட்டானா தெரியலை கேக்கணுமே.....
Unblock....

ஹூம். சாப்பிட்டா என்ன 
சாப்பிடலனா என்ன கிடக்கட்டும்...
Block.......

Upset ஆக இருப்பானோ.....
Unblock.....

Sunday, 12 March 2023

குறள் : 1207

நின்னை
நினையாமல்
இருப்பதற்கும்
முடியாமல்
மறப்பதற்கும்
முடியாமல்
தள்ளாடி 
தவிப்பதற்கு 
பதிலாக 
நான் இல்லாமல்
போகவே 
முயற்சிப்பேன்
நினைவுகள்
கொல்வதற்கு
முன்னர்
நிஜத்தை
கொல்வது 
எளிதாக
படுகிறது.
காற்றிலாத
பலூன்
நீரிலாத
குளம்
நீலம் இலாத
வானம்
இருந்தால் என்ன
மறைந்தால் என்ன!

Saturday, 11 March 2023

குறள் :1206

கண்கள்
உறுதி செய்த
காதலை
வாய்மொழியில்
கொண்டுவர
தெரியாமல்
சம்பந்தமில்லாத
வார்த்தைகள்
கொண்டு
தொடங்கிய பேச்சு
'காபி வித் இந்துவா'
இன்றும் காலையில்
சொல்லி பார்க்கிறேன்

நீயும் பேச தெரியாமல்
கடைக்குபோறேன்
ஏதேனும் வேண்டுமா
கேட்டு முழித்தாய்
ஷாம்பு வாங்கிவா
சொன்னதும்
அதோடு சேர்த்து
டெய்ரி மில்க்கும்
வாங்கிவந்தாய்


எனை கேலிசெய்த
ஒருவனை கேள்விகேட்க
படைதிரட்டி சென்று
பயமுறுத்தி வந்தாய்

இப்படி எண்ணற்ற
இனியநினைவுகளால்
என் இன்றைய
வாழ்க்கை ஓடுகிறது

நீ இல்லைஎன்றாலும்
உன்நினைவுகள்
காற்றாகி நீராகி
எனை உயிர்ப்பித்து
கொண்டிருக்கின்றன

உன் வருகைக்காக
எனை காக்கவைக்கின்றன!

Friday, 10 March 2023

குறள் 1204



(சமையலறையில் நான். ஜன்னலில் பழுப்பி. காலை 7மணி)

பழுப்பி : மீமீ.... மியாவ்வ்.. யாயா?
நான் :  பாலூற்றும் மாமா ஊருக்கு போயிட்டார்

பழுப்பி : யாவ்மி... மமியாவ்..மிவ்யாயா?
நான்: எப்ப வருவார்னு சொல்லலைடி

பழுப்பி: மியாவ்..மியாவ்மியாவ். மிவ்வ்மி
நான்: என்னையே நினைச்சுக்குவாரா தெரியலை. இதுல உன் ஞாபகம் வருமானு வேற கேக்குறே. ஆசைதான்டி உனக்கு!

பழுப்பி: மியாவ்மி மிமிமி யாவ்மி மிவ்
நான்: ஏன் நான் பால் ஊற்றினா ரதிக்கு தொண்டைல இறங்காதா? அவரேதான் ஊத்தணுமா?
பழுப்பி: யாவ்மி வயாவ்மி மியாவ்!
நான்: சரி சரி புலம்பாதே பால் கொண்டு வரேன்.


Compliments : 

Wednesday, 8 March 2023

குறள் : 1201

காக்கைச் சிறகினிலே நந்தலாலா அவள் கருங்கூந்தல் தோன்றுதடா நந்தலாலா 
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா அவள்
பச்சைநரம்புகள் தோன்றுதடா நந்தலாலா 
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா அவள்
குரலே இசைக்குதடா நந்தலாலா 
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா அவளை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...