Friday, 17 October 2025

வடிவு

வடிவின்
வடிவத்தில்
மயங்கியது
சிலை!

ஏக்கத்தில்
கேட்டது
என்ன க்ரிம்
பூசுகிறாய்
என்று!

சீலை 
விலை
கேட்டது
சிலை!

மகாலட்சுமி

நடமாடும்
சிலை
தன் அருகே
நிற்கக் கண்டு
ஆனந்த
மிகுதியில்
முத்தமிட
வளைகிறானோ
அந்த ஆண்மரம்?

மிருதுளா

மிருதுளமே
மென்மையே
வளர்பிறையாக
வளர்ந்து
பௌர்ணமியாக
ஒளிர்க! 
குளிர் நிலவாக
திகழ்க! 

வாழ்க வளமுடன். 💐❤

கண்களால் கைது செய்

கேமராவில்
கைது செய்யமுடியாத
காட்சிகளை
கண்களால்
சிறைப்படுத்தும்
முயற்சியா
மகனே?

நீ எடுத்த
புகைப்படத்தை
போலவே
உன் புகழும்
மங்காதிருக்கட்டும்! 

வாழ்க! வளர்க! 💐❤

Wednesday, 24 September 2025

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில்
ஒற்றுமை 
சொல்லித்தரும்
வைபவம்
இந்தக் கொலு! 

சைவமும் 
வைணவமும்
ஒன்றென
நிரூபிக்க
சிவனும்
ஹரியும்
ஒன்று சேரும்
வைபவம்!

ஆணும்
பெண்ணும்
முதியவரும்
குழந்தையும்
அனைவரும் 
ஒன்றாக
கூடிக்குழவி வாழச்
சொல்ல வந்த
வைபவம்
இந்தத் கொலு! 

மண்ணாலும்
மரத்தாலும்
கல்லாலும்
உலோகத்தாலும்
நிறத்தாலும்
உடையாலும்
செல்வத்தாலும்
வேறுபட்டாலும்
ஒன்று கூடி 
ஒரே இடத்தில்
வாழச் சொல்ல வந்த
வைபவம்
இந்தக் கொலு!

Tuesday, 9 September 2025

குறள் 1271

உள்ளக் கிடக்கையை
உதடுகள் 
மறைக்கலாம்

கண் மறைக்குமோ? 

இலை
மறைக்கும்
கனியை
வாசம்
காட்டிக் கொடுப்பது
போல

என்மீது
கொண்ட
நேசத்தை
உன் கண்கள்
என்னிடம்
சொல்லி விடுகிறது

ஆதலால்
காதலை
மறைக்க
நினைக்காதே

தோற்றுப்போவாய்!

Wednesday, 30 July 2025

யார் நீ

பிரமிப்பு
அதிர்ச்சி
இதில்
என்ன 
பெயர் 
வைப்பது?

உறுதி
கர்வம்
இதில்
என்ன
பெயர்
வைப்பது? 

தலைமைப் பண்பு
அகங்காரம்
என்ன 
பெயர்
வைப்பது? 

நட்புக்கும்
அலுவலுக்கும்
வித்தியாசம்
கற்பிக்கிறாரா

இல்லை 
நான் தான் 
எல்லாம்
ஆணைக்கு
கட்டுப்படுவது
உன் வேலை
என்கிறாரா?

புரியாத 
குழப்பத்தில்
புன்னகையோடு
கடக்கிறேன்.

சிங்கமாக
நினைப்பதா
சிறுமையாக
நினைப்பதா

மனிதர்களுக்காக
நிறுவனமா

நிறுவனத்திற்காக
மனிதர்களா

விதிமுறை
பெரிதா

மனிதர்களின்
மகிழ்ச்சி 
பெரிதா

உன்னை
அகங்காரி
என்பதா

அமைப்புகளின்
சிறந்த நிர்வாகி
என்பதா

மாறுவதா
மாற்றுவதா

பின்பற்றவா
புறம் தள்ளவா

எதை 
செய்வது
எதை
விடுவது? 

விடை
தருவாயா?
விட்டுச்
செல்வாயா?

Wednesday, 16 July 2025

மாணிக் பாட்ஷா

மூக்கின் அழகுக்கு
முன்னூறு கவிதை
படைக்கலாம்

கவிதை
சமைப்பதைத் தாண்டி
மூக்கின் சரிவில்
சறுக்கி விழுந்தால்
என்னாவது
சுயமரியாதைக்கு
பங்கம் வருமே!

ஆங்கிலப்புலமையிலும்
ஆளுயரத்திலும்
அண்ணாவின் வடிவம்!

காற்று வெளியிடையே
புயலாக மாறி
விண்ணிலும்
மண்ணிலும்
தேசம் சுற்றும் வாலிபர்!

நீலவண்ணம் மீதான
நீங்காத நேசத்தை
கண் கண்ணாடிச் சட்டமும்
தொலைபேசி உறையும்
கடிகார வார் பட்டையும்
சட்டைப் பேனாவும்
பறைசாற்றும்!

இந்தியாவின்
இறையாண்மையை
காக்கத் துடிக்கும்
என் இறைவன் ராகுலின்
மிகச்சிறந்த
படைத் தளபதி!
இது ஈடுபாட்டை
இன்னும் கூட்டுகிறது!.

காமராஜர் விருது
ஆண்டு தோறும் வழங்கி
கல்வியின் மாண்பை
தூக்கிப்பிடிப்பவர்.

கட்சித் தாவல் செய்யாது
காலமெல்லாம் காங்கிரஸ்
ஒருவனுக்கு ஒருத்தி
என்பது போல
கலப்படம் இல்லாத கட்சிப் பற்று!

Wednesday, 14 May 2025

அரசவை நிகழ்வு

சேரநாட்டு
அரசவையில்
ஆலோசனை
நடந்தது!

குளிர்பதன ஆலைக்கு
பொறுப்பாளர் தேர்வு

அனுபவமிக்க
சிப்பாயை
சேனாதிபதி
பரிந்துரைத்தார்!

சிப்பாயோ
பொறுப்பைத்
தட்டிக்கழித்து
காரணங்களை
வரிசையிட்டார்.

அவனுக்கு கொடுங்கள்
இவனுக்கு கொடுங்கள்
என தள்ளிவிட பார்த்தார்!

சிப்பாயின் வேலை
அரசுக்கு
பணிசெய்தல்தானே?
அவர் ஏன்
தட்டிக் கழிக்கிறார்?

அங்கிருந்த
அனுபவமிக்க
நிர்வாகத்திறன்
நிறைந்த
மந்திரியோ

சோழ நாட்டு
ராஜாங்கத்தில்
கடைப்பிடிக்கும்
பழக்கம் ஒன்றை
பரிந்துரைத்து
ஒதுங்கி நின்றார்.

சோழ தேசத்தில்
ஆராய்ச்சி
வழிகாட்டுதல்
பன்னாட்டுப்
படையெடுப்பு
என பல பொறுப்பு உண்டு

நம்நாட்டு
சிப்பாயிக்கு
அப்படியென்ன
வேலை உண்டு?

சேரநாட்டு
மந்திரியாரே,

சிப்பாயின்
கடமை
பணிசெய்வது
என பரிந்துரை
ஏன் செய்யவில்லை?

மந்திரியின் மதி
மயங்கியதேனோ?

Saturday, 10 May 2025

மௌனிக்கு வாழ்த்து

அரசமர நிழலில்
சிமெண்ட் பெஞ்சில்
தவமிருந்து
முக்திபெறும்
புத்தருக்கு இனிய 
பிறந்தநாள் வாழ்த்துகள்! 💐💐💐

ஞானம் பெற்று
முடிந்திருந்தால்
புத்தகம் எழுதி
வருங்கால
சமுதாயத்திற்கு
வழிகாட்ட
வேண்டுகிறேன்.

திரவ இயக்கவியல்
திராவிட இயக்க இயல்
ஏதேனும் ஒன்றை
எழுதத் தொடங்கலாமே

மௌனிக்குள்
எரிமலை
ஏன் இருக்கக் கூடாது? 

அடுத்த அகவை 
நாளுக்குள்
புத்தக வெளியீடு
செய்யுங்கள்! 

நலம் விழையட்டும்! 

                     ~ யாரோ

விஜி EEE

ஆண்டு அதிகமாக முதுமை வரும் உலக நியதி! அதை உடைத்தெறிந்த மார்கண்டேயி எங்கள் விஜி! பாவாடைச் சட்டையில் பள்ளி செல்லும் மாணவி சேலை கட்டி நி...