விடைகொடுக்கும் விடிவெள்ளி,
திசை காட்டும் துருவ நட்சத்திரம்,
வழிநடத்தும் கலங்கரைவிளக்கம்,
நிலைநிறுத்தும் நங்கூரம்,
துயில் கொடுக்கும் தாலாட்டு,
இனிவரும் வசந்தத்தின் குயில்பாட்டு,
ஒரு உருவில் எத்தனை பரிமாணங்கள் !
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...