Saturday 4 February 2023

குறள் : 1171

கண்கள் 
என்ன பெண்பாலா?
பின்விளைவு
அறியாமல்
காதலித்துவிட்டு
பின்னர்
கண்ணீரும்
உகுப்பதேன்?
பெண்புத்தி போல
கண்புத்தியும்
பின்புத்தி தானோ?
விதை ஒன்று 
போட்டால்
சுரை ஒன்றா 
முளைக்கும்
இதுகூட 
அறியாத
அறிவிலியா
கண்கள்?
இன்பத்திற்குப்பின்
துன்பம்
அறியாயோ கண்ணே?
நீ என்ன 
மக்குப்பெண்ணா?

தனிமனிதர் ஹைப்பர்லூப் கிடைப்பது எப்போது
கண்ணாளனை நொடிகளில்
பார்ப்பது அப்போது!

Comments :

Thursday 2 February 2023

குறள்:1168

இரவும் நானும்
இணைபிரிந்த 
தோழிகள்!
அவளுக்கு
என்னைவிட்டால்
உறவொன்றும்
இல்லை!
ஆதலால்
இரவோடு
உறவாடி
கவலைகளை
போக்கிக்கொள்கிறேன்!
நிலாமகன்
மாதம் ஒருமுறைதான்
சந்திக்க வருகிறானாம்
இரவு குறைபட்டுகொண்டாள்!
என்னவனும்
அப்படித்தான்
ஆடிக்கொருதரம்
அமாவாசைக்கொருதரம்
வருகிறான்!

Comments:

குறள் : 1169

நீ வரப்போகிறாய்
என்று தெரிந்த
நாட்களிலும்
நீ போகப்போகிறாய்
என்று தெரிந்த
நாட்களிலும்
இரவு என்ன
இருபது மணிநேரம்
நீள்கிறது?
இரவு எதிரிக்கு
எவ்வளவு லஞ்சம்
தந்துபோனாய்
உன்னையே 
நினைத்திருக்க
யாவற்றையும்
மறந்துபோக
நீ இரவுக்கு
லஞ்சமாக
வைரநட்சத்திரங்களை
வாரி இரைத்து
போனாயோ?

Comments : 

Monday 30 January 2023

நினைவஞ்சலி

பனமட்டை தட்டி
பசிபோக்கி கொண்டவர்
ஏழ்மையில் வளர்ந்ததால்
கறிவேப்பிலையும்
உண்டவர்
உடன்பிறந்தோர் ஒன்பதில்
உயர்ந்த வாழ்க்கை
தொட்டவர்
படிப்பை பற்றிக்கொண்டு
பலருக்கு கற்பித்தவர்
பண மேலாண்மை
என்னவென்று
பாடம் கற்பித்தவர்
சிக்கனம் வார்த்தைக்கு
இலக்கணமானவர்
ஆட்டுக்கல்லுக்கும்
ஆடைபோர்த்தி
பாதுகாத்து வைத்தவர்
TVS 50 க்கும் வெயில்
சுடும் என்று
சாக்குபோட்டு காத்தவர்
மனைவிசொல்லே
மந்திரம் என்று
வாழ்நாள் முழுக்க
கடைபிடித்தவர்
மரங்களை கூட
மகன்களாக வள்ர்த்தவர்
முருங்கையும்
மாதுளையும்
பேரன்களாக பேணியவர்
அணிலுக்கும்
இவருக்கும்
எப்போதும் போட்டி
பழுத்த கொய்யாவை
யார் முதலில்
திண்பதென்று!
மாம்பழம் தந்துவிட்டால்
மதியசோறும்
வேண்டாம் என்பார்

கால்புண் காலன்
வந்து பரலோகம்
கூட்டி சென்றான்
உணவுசெல்லும்
பிளாஷ்டிக் குழாய்
பாசக்கயிறாய்
போனதேன்

நீங்காத நினைவில்
சுற்றமும் நட்பும்

                  -  தெய்வானை

Sunday 29 January 2023

பயணங்கள் முடிவதில்லை!

பயணிகள் மாறலாம்
பயணங்கள் முடியுமோ?
வடக்கே போகும்
வானூர்திகள்!

குறள் 1165

இரண்டு நாட்கள்
எதிர்பாரா பிரிவு
என்னாச்சு
எங்கே போனே
உடல்நலம் சரியா
உள்ளநலம் சரியா
சாப்பிட்டாயா
தூங்கினாயா
ஏனையோர் நலமா
நூறுகேள்வி கேட்டாச்சு
பதில் ஒன்றும்
வரவில்லை
எரிச்சல் வந்தது
கோபம் வந்தது
ஏமாற்றம் வந்தது
தற்காலிகபிரிவே
இத்தனை துன்பம்
என்றால்
நிரந்தரப்பிரிவில்
நான் சப்தமின்றி
சாவேனோ?

Thursday 26 January 2023

குறள் 1162

மணிக்கொருமுறை
Hi அனுப்பினாள்
பேசுவதற்கு
விசயம் இருந்தாலும்
இல்லாவிட்டாலும்!
அவனுக்கு புரியுமா
Missing him என்று?
பதில்வரவில்லை
கொஞ்சநேரம் கோபம்
வெட்கமின்றி மீண்டும்
Busy ஆ கேட்கிறாள்
பாழாய்போன
காதல்தான்
பாடாய்படுத்துகிறது!
ரோசமும் இல்லை
வேஷமும் இல்லை!
சாப்பிட்டீங்களா
கேட்டாள்
நீ சாப்பிட்டாயா
திருப்பி கேட்பானென
ம்ஹும்.
யெஸ்ஸோடு
முடித்துக்கொண்டான்
How are you
கேட்டாள்
நீ நலமா 
கேட்பானென்று
ம்ஹும்.
Great உடன்
முடித்துக்கொண்டான்
அப்படி என்ன தான்
வேலையோ
அன்பிற்கு இடமின்றி
இழந்தபின்னும்
இறந்தபின்னும்
தரும் அன்பால்
காயங்கள்
மறைந்திடுமோ?


Comments : 

Wednesday 25 January 2023

குறள் 1160

நடந்து வருவாயா
படுத்து வருவாயா
நானொனறும் 
அறியேன்!
மகன் முகம்
பார்ப்பாயா
மண்ணுக்குள்
புதைவாயா
நானொன்றும்
அறியேன்!
வீரக்கதைகள்
நீ சொல்லக்கேட்டு
புளகாங்கிதம்
அடைவானா 
நம்மகன்
நடக்குமா இது
நானறியேன்
கண் அறுவை
செய்த அம்மா 
மருத்துவமனையில்
அப்பா கால்ஒடிந்து
வீட்டு வராண்டாவில்
அறிந்தாலும்
வரமாட்டாய்
அறிவேன் நான்
நீயில்லா சுமையும்
நீவிட்டுப்போன சுமையும்
கண்ணீரோடு
சுமப்பேன்
கவலையில்லை
ஆனால்.....
வந்துட்டேன்டி
கண்ணம்மா
என்று சொல்ல
திரும்பிவருவாய்
என்ற வரம் தந்து
பிரிந்துசெல்
மன்னவனே!

குறள் 1161

வன்முறையை
மறைக்கவே
முயற்சிக்கிறேன்!
பாழாய்போன
BBC காரன்
மேலும் மேலும்
பகுதிகள் விடுகிறான்
அதுபோல
காதல் துன்பமும்
மறைக்க முயன்றும்
மீண்டும் மீண்டும்
பெருகி கொண்டே
போகிறது......
இஸ்லாம் மீதான
வன்முறையும்
மாமன் மீதான
காதலும்
இரண்டும்
ஊற்றுநீர்!
தீர்வதே இல்லை!

சாரி

சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!