Monday 20 November 2023

திராட்சை

அறிவில் ஒளவை,
குணத்தில் காகம்,
பேச்சில் கிளி,
எழிலில் மயில்,
சிந்தையில் நதி,
அன்பில் சோலை,
சுவையில் தேன்,
பழத்தில் திராட்சை,
நீ யார் ?

வீழ்ச்சி

வீழ்த்தி கர்வமானாய்,
வீழ்ந்து பெருமிதமானேன்,
வீழ்ச்சியும் வெற்றியே !
வீழ்ந்தவர் எழவேண்டும்,
சிலசமயம் எழவேகூடாது,
வீழ்ச்சியும் எழுச்சியும்,
எதற்கு என்பது தீர்மானிக்கும்,
வெற்றி எது என்பதை !
வெற்றி கொள் !

வசந்தம்

புது வசந்தம்,
புது பொலிவு,
புது நம்பிக்கை,
புது இலக்கு,
புது பரிணாமம்,
பயணங்கள் தொடர்கின்றது !

நல்வீணை

சேற்றில் செந்தாமரை,
புழிதியில் நல் வீணை,
குப்பையில் குண்டுமணி,
தவிடில் தங்கம்,
குடத்தில் விளக்கு,
இடம் தவறியவை எத்தனை ?
கண்டு கடக்கிறோம் !
சிலர் நின்று நிமிர்ந்து,
இருப்பிடம் சேர்க்கிறோம் !

அவன்

கனவுகளின்
தொழிற்சாலை
அவன்!

வானம்
தொட்டுவிடும்
தூரம்
என்பான்!

வானவில்லை
மண்ணில்
வளரவைப்பேன்
என்பான்!

பேரரசை
உருவாக்க
பாடுபடும்
பேராசைக்காரன்!!

வரப்போகும்
சந்ததிக்கு
வானமளவு
சேமிப்பானாம்!

வஞ்சியை
தரிசிக்க
வருடத்தில்
ஒருநாளாம்

கொஞ்சியும்
கெஞ்சியும்
வாழ்நாளை
கழிப்பானாம்

அன்பானவன் தான்
கொஞ்சமாக
அசட்டைக்காரனும் கூட

மல்லிகை
வாங்க
மறந்துவிடுவான்

மாளிகை
பரிசளிக்க
மறக்கமாட்டான்

பிறந்தநாளை
மறப்பான்
பிரியும் நாளில்
வாடுவான்

வெளியார்முன்
திட்டாதே என
தனியறையில்
கெஞ்சுவான்

கிறக்கமடி
என்பான்
ஆனால்
என்னை
காத்திருக்க
வைப்பான்!

அன்பு பாதி
ஆசை பாதி
கலந்து செய்த
கலவை அவன்!

உள்ளே குழந்தை
வெளியே அறிவாளி
விளக்கமுடியாத
கவிதை அவன்!

அன்பு மொழி

சித்திரைக்கு முந்தியவள்,
நித்திரையை நிந்தியவள்,
மந்திரியாய் ஆளுபவள்,
முகத்திரையாய் மிளிர்பவள் ! 

குரல் கேட்க ஏங்குபவள்,
கான குரல் இசையாய் ஒலிப்பவள்,
இன்ப நிலா காண்பதற்கே,
தேன் மழையில் நனைப்பவள் !

மலர்ச்செண்டு போதும் என்பாள்,
மறக்காமல் வாழ்த்து கேட்பாள்,
உறங்கச்சொல்லி கதைப்பாள்,
விடியும்மட்டும் சுவைப்பாள் !

அன்பு மொழி உரைப்பாள்,
உரிமைக்கு மட்டும் சண்டையிட்டு,
உதடெல்லாம் கடிப்பாள்,
இவளன்றி நானோ ?
இவ்வுலகில் இருப்பேனோ ?

Friday 17 November 2023

இரவு சூரியன்

என் இன்பமும் நீ
என் அவஸ்தையும்  நீ
என் இரவும் நீ
என் சூரியனும் நீ 

என் பகல் நீ
என் கனவு நீ
என் மெய் நீ
என் பொய்யும்  நீ
என் சிந்தை நீ
என் சிரிப்பும் நீ

நான் தொலைந்து போகும் காடும் நீ
வீடு வந்து சேர வழிசொல்லும் பலகையும் நீ

நான் மூழ்கும் வெள்ளம் நீ
எனை கரைசேர்க்கும் அலையும் நீ

நான் தொடமுடியா வானம் நீ
எனை தொடச்சொல்லி
தூண்டும் ஆவலும் நீ

வதைப்பவனும் நீ
வலி போக்குபவனும் நீ

உயிர் தருவதும் நீ
உயிர் எடுப்பதும் நீ

அனைத்துமாய் நீ இருக்க

அனுமதி யார் தந்தார்?

Thursday 16 November 2023

திலகம்

நெற்றியில் முத்த திலகமிட,
நான் நிச்சயம் உயரணும் !
உன் அன்பு பெருமலைக்கு முன்,
நான் சிறு குன்று தான் !❤️❤️❤️

Wednesday 15 November 2023

கரை

அதிர்ஷ்ட தேவியே,
எனை அணை !
அன்பு மழையே,
எனை நனை !
தேன் குழலே,
எனை இசை !
தென்றல் காற்றே,
எனை தாலாட்டு !
குளிர் நிலவே,
எனை தனி !
சுனை நீரே,
எனை பருகு !
காதல் தீயே,
எனை ஒளிரேற்று !
உன்னில் கரைந்துபோவேன் !

Monday 13 November 2023

கனவு

கனவே,
தேனே,
ice ஏ,
நிலவே,
மயிலே,
என் மனமே !
ஒரு படுக்கையில்,
வேர்வை சிந்தியபின்,
ஒரு வாழ்வை,
முழு இரவும் கதைப்போம்!
பிடித்ததை,
படித்ததை,
கசந்தத்தை,
இனித்ததை,
சுவைத்ததை,
பயணித்ததை,
சுமந்ததை,
சுமப்பதை,
வலியை,
வேதனையை,
நீ, நான், நிலவுமட்டும் !
முழு இரவு கதைப்போம் !
நீ கேட்கும் போதே தூங்குவாய்,
கேட்கும் காது இருப்பதால்,
நான் சொல்லி தூங்குவேன் !
எழும்போது புது,
உலகை பார்ப்போம்,
ஆள்வோம்,
அன்பால் ஆள்வோம் !

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...