Monday 20 November 2023

சிலேடை

சிந்தித்து சிலாகிப்பாள்,
சிலேடைமொழி உரைப்பாள்,
சிலசமயம் மதியுரைப்பாள்,
கண்டால் முறைப்பாள்,
காணாது திகைப்பாள்,
கவிச்சொல் வடிப்பாள்,
சினேகித்து சுவைப்பாள்,
பேசாது இனிக்கும்,
இது ஊடல் அல்ல,
பின்ன என்ன ?

வானவில்

வீட்டுக்குள் வானவில்,
கூட்டுக்குள் வண்ணமயில்,
நிலவொன்று சாளரத்தில்,
நினைவொன்று யாரிடத்தில்!
❤️💐

மழை

பொழியும் அன்பிற்கு,
மருகும் கண்களுக்கு,
தேடும் செவிகளுக்கு,
நேசிக்கும் நெஞ்சத்திற்கு,
என்ன அன்பு செய்வேன் !❤️❤️❤️

நடுக்கம்

பேச்சில் ஏன் நடுக்கம்,
சிந்தையில் ஏன் சுணக்கம்,
வார்த்தைகள் ஏன் வற்றிப்போயின,
தமிழ் எனக்கு வராதோ ?
தாய்மொழி மறக்குமோ ?
மனம் பச்சிளங்குழந்தை தான் !❤️❤️

திராட்சை

அறிவில் ஒளவை,
குணத்தில் காகம்,
பேச்சில் கிளி,
எழிலில் மயில்,
சிந்தையில் நதி,
அன்பில் சோலை,
சுவையில் தேன்,
பழத்தில் திராட்சை,
நீ யார் ?

வீழ்ச்சி

வீழ்த்தி கர்வமானாய்,
வீழ்ந்து பெருமிதமானேன்,
வீழ்ச்சியும் வெற்றியே !
வீழ்ந்தவர் எழவேண்டும்,
சிலசமயம் எழவேகூடாது,
வீழ்ச்சியும் எழுச்சியும்,
எதற்கு என்பது தீர்மானிக்கும்,
வெற்றி எது என்பதை !
வெற்றி கொள் !

வசந்தம்

புது வசந்தம்,
புது பொலிவு,
புது நம்பிக்கை,
புது இலக்கு,
புது பரிணாமம்,
பயணங்கள் தொடர்கின்றது !

நல்வீணை

சேற்றில் செந்தாமரை,
புழிதியில் நல் வீணை,
குப்பையில் குண்டுமணி,
தவிடில் தங்கம்,
குடத்தில் விளக்கு,
இடம் தவறியவை எத்தனை ?
கண்டு கடக்கிறோம் !
சிலர் நின்று நிமிர்ந்து,
இருப்பிடம் சேர்க்கிறோம் !

அவன்

கனவுகளின்
தொழிற்சாலை
அவன்!

வானம்
தொட்டுவிடும்
தூரம்
என்பான்!

வானவில்லை
மண்ணில்
வளரவைப்பேன்
என்பான்!

பேரரசை
உருவாக்க
பாடுபடும்
பேராசைக்காரன்!!

வரப்போகும்
சந்ததிக்கு
வானமளவு
சேமிப்பானாம்!

வஞ்சியை
தரிசிக்க
வருடத்தில்
ஒருநாளாம்

கொஞ்சியும்
கெஞ்சியும்
வாழ்நாளை
கழிப்பானாம்

அன்பானவன் தான்
கொஞ்சமாக
அசட்டைக்காரனும் கூட

மல்லிகை
வாங்க
மறந்துவிடுவான்

மாளிகை
பரிசளிக்க
மறக்கமாட்டான்

பிறந்தநாளை
மறப்பான்
பிரியும் நாளில்
வாடுவான்

வெளியார்முன்
திட்டாதே என
தனியறையில்
கெஞ்சுவான்

கிறக்கமடி
என்பான்
ஆனால்
என்னை
காத்திருக்க
வைப்பான்!

அன்பு பாதி
ஆசை பாதி
கலந்து செய்த
கலவை அவன்!

உள்ளே குழந்தை
வெளியே அறிவாளி
விளக்கமுடியாத
கவிதை அவன்!

அன்பு மொழி

சித்திரைக்கு முந்தியவள்,
நித்திரையை நிந்தியவள்,
மந்திரியாய் ஆளுபவள்,
முகத்திரையாய் மிளிர்பவள் ! 

குரல் கேட்க ஏங்குபவள்,
கான குரல் இசையாய் ஒலிப்பவள்,
இன்ப நிலா காண்பதற்கே,
தேன் மழையில் நனைப்பவள் !

மலர்ச்செண்டு போதும் என்பாள்,
மறக்காமல் வாழ்த்து கேட்பாள்,
உறங்கச்சொல்லி கதைப்பாள்,
விடியும்மட்டும் சுவைப்பாள் !

அன்பு மொழி உரைப்பாள்,
உரிமைக்கு மட்டும் சண்டையிட்டு,
உதடெல்லாம் கடிப்பாள்,
இவளன்றி நானோ ?
இவ்வுலகில் இருப்பேனோ ?

சாரி

சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!