பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலே புரிந்துகொள்ளாமலே முழு வாழ்க்கையை கழித்துவிடுகிறோம். நான் பேசினால் ஒரு பயல் கேட்பதில்லை என்பவர்கள் தங்கள் வார்த்தைகளை உற்று நோக்குங்கள். என் பேச்சிற்கு மரியாதை இல்லை என்பவர்கள் உங்களின் வார்த்தைகளை கவனியுங்கள். சுடாத வார்த்தைகளா அவை?
அவன் சுமைகளை இறக்கிவைக்கும் சுமைதாங்கி நான் தனது கனவுகளை என் செவி வழி நுழைத்து சிந்தையை நிரப்பி முழுநேரம் எனை ஆட்கொள்வான் அப்படி செய்யலாமா இப்படிசெய்யலாமா அதை செய்யலாமா இதை செய்யலாமா இப்படியே குழம்பியிருப்பேன் நான்