Saturday, 17 September 2022

Secret

ஏழு ஸ்வரங்களும் உன் குரலாகுதே
இரண்டு கண்கள்  தீயாய்  சுடுதே
நவ கிரகங்கள் நீயாக சுற்றுவேன்
பூஜ்யம் நானும் ராஜ்ஜியம்  ஆள்வேன்
எட்டு திசையும் முரசொலி கேட்க
நவ துவாரமும் உனையே யாசிக்க
ஒன்று படும் நாள் எப்போது வருமோ
ஜீரோ வாட் நானும்  LED  நீயும்
மூன்று முடிச்சால் இணைவோம்
எட்டு வைத்து ஓடி வா கண்ணே!

சிறுத்தைப்பா

சிறுத்தைப்பா

வேகமாய் ஓடிவா
விவேகமாய் பேசவா
இனம் தனை காக்கவா
மானம் தனை போற்றவா
கல்விகொண்டு உயரவா
கேள்விகேட்டு துளைக்கவா
சிறுமை கண்டு பொங்கவா
சிறுத்தையே சீறிவா

கூட்டமாய்  காவல் செய்
காட்டமாய் கோபம் செய்
தாய்தங்கை காத்திட
சகோதரன் வாழ்ந்திட
சமத்துவம் தழைத்திட
சமூகநீதி ஓங்கிட
சுற்றுசூழல் போற்றிட
சுரண்டலை ஒழித்திட
வேகமாய் ஓடிவா
விவேகமாய் பேசவா

உணவால் பிரியோம்
உணர்வால் பிரியோம்
சாதியால் பிரியோம்
வேதத்தால் பிரியோம்
அற்பரால் வீழோம்
ஆரியத்தால் அழியோம்

S.Deivanai

ஆசான்

சோபாவும்  பெட்டும்
உணவு சிதறி கிடக்கும்
துணி வைக்கும் ஏரியா
அலங்கோலமாய் கிடக்கும்
மாற்று ஜோடி செருப்புகள்
அங்கொன்றும் இங்கொன்றும்
அந்த ஏசியை போடுப்பா
அதிகாரம் பறக்கும்
அத்தனை சோம்பேறி
அம்மாவின் வீட்டில்

காதல்கொண்டு போன
தோழி வீட்டை தட்டினேன்
அத்தனையும் நேர்மாறாய்
வாசமான காபி தந்தாள்
முறுகலாய் தோசை தந்தாள்
நீயா இப்படி எப்படிடீ என்றேன்
காதல் கற்று தரும்
உனக்கு புரியாது போடி என்றாள்

ம்ம்ம்ம். காதலும் ஆசானே
கற்றுக்கொண்டேன் தோழி

கோபம்

#கோபம்

நேரில் அமர்ந்து
பேசவில்லை
தேடிவந்தேன்
தள்ளிவிட்டாய்
கூட்டம் கூட்டி
திட்டி தீர்த்தாய்
கொன்றுவிடுவேன்
ஆவேசம் காட்டினாய்
எனக்கு தெரிந்ததை
செய்தேன் பேசினேன்
உனக்கு ஏனோ
புரியவில்லை
பிடிக்கவில்லை
எனை துண்டுகளாக
சிதறச்செய்தாய்
ஆனந்தம் பிரபா
அதையும்  ஏற்கிறேன்.
நாளை என்மகன்
தடுமாறும்போது
வழிகாட்டவேணும்
அன்பு செய் அவனிடம்
என்மீதான கோபம்
என்னோடு போகட்டும்
     இப்படிக்கு
     ராஜீவ்காந்தி

Tuesday, 2 August 2022

சிறகு விரிப்பவன்

வானம்பாடி

பறவைகளும் விலங்குகளும் பசி அடங்கியதும் உறக்கம் கலைந்ததும் பறக்க ஆரம்பித்துவிடுகின்றன. அடுத்த வேளை உணவை சேமித்து வைப்பதில்லை. அவ்வப்போது இரை தேடி உண்டு ஓய்வெடுத்து மகிழ்கின்றன. கூடுகளும் கூடல்களும் நிரந்தரமில்லை. தேவை முடிந்ததும் பறக்கின்றன. நீயும் அப்படித்தான் மாமா. மனித உரு கொண்ட வானம்பாடி. சுமைகளை விரும்புவதில்லை. மகிழ்ச்சியாய் சிறகடிக்க விரும்புகிறாய். உன் பயணம் இனிதே தொடரட்டும்.

ஆனால் மற்றவர் நினைக்கும் அளவுக்கு நீ கோபக்காரனும் இல்லை. கொடுமைக்காரனும் இல்லை. புலித்தோல் போர்த்திக்கொண்ட குழந்தை மனதுக்காரன். உன் கர்ஜனை எல்லாம் போலி. அந்தந்த நிமிடத்து நியாயக்காரன். உள்ளுக்குள் மிருதுவானவன். வெளிப்பார்வைக்கு கடினமானவன்.
Material science பாடத்தில் Case hardening என்ற வார்த்தை வரும். Gears are subjected to this process. To withstand friction & wear only top surfaces are case hardened. But the core will be soft enough to receive vibrations during running. நீயும்அப்படித்தான். Case hardened material. 

Tuesday, 26 July 2022

வீரன்

மறவன் என்பதா
துறவன் என்பதா
மதியோன் என்பதா
மதியான் என்பதா
வேந்தனையும் வீழ்த்தும்
வேடன் என்பதா

என்னென்று  அழைப்பதோ
எங்கனம் புகழ்வதோ

வாழிய நின்புகழ்!
வாழிய நின்நலம்

Thursday, 26 May 2022

நான் யார்

நான் யார் ? 

பதிலே வராது என
தெரிந்தும் கேள்விகேட்கும்
முட்டாள் நான் 

படிப்பாயா என தெரியாமல்
பதிவு செய்யும்
பைத்தியம் நான் 

படிக்காதது போல் நீ
நடிப்பது தெரிந்தும்
பின்தொடரும்
முட்டாள் நான் 

உதாசீனம் செய்வது
உணர்ந்தும் உனை
உதறிவிட மறுக்கும்
தாய் நான் 

நீண்ட நெடிய
பெருமூச்சு விடும்போது
இவன் போகட்டும் வெளியே
ஆசைப்படுகிறேன் 

அடுத்த நொடியில்
உள்நுழைந்து
உயிர்காற்றாய்
நிறைகிறாய் 

நான் ஏன் இப்படி
நிலையில்லாமல்
தவிக்கிறேன் 

நான் யார் புரியவில்லை
உனக்கு தெரிந்தால்
சொல்லேண்டா! 

யாரோ !

Wednesday, 18 May 2022

கலக்கம்


பொதுவெளியில் 
வெட்கமின்றி
அன்பின்பிரகடனம்
அசிங்கமாய் இருந்தது.
சரியா தவறா
குழப்பமாய் இருந்தது
யார்யார் என்னென்ன
நினைத்திருப்பர்
அசடு அறிவிலி
அலைபவள் வழிபவள் 

வழிகாட்டும் திசைகருவி
திசை மாறிப்போனேன்
உயர்பதவி நல்வாழ்வு
அத்தனையும் மறந்தேன்
காதலா கவர்ச்சியா
உன் அறிவா அழகா
எது உன்னிடம் இழுக்கிறது
உன்சரியும் என்சரியும்
ஒத்துப்போவதாலா
அலைவரிசை ஒருகோட்டில்
பயணிப்பதாலா
விருப்பும் வெறுப்பும்
ஒன்றானதாலா
நீ தவிர்ப்பதும்
தள்ளி இருப்பதும் 
இருவரின் நன்மைக்கா
இல்லை நீ உயரத்தில்
இருப்பதாக எண்ணிக்
கொள்வதாலா
எதுவோ இருக்கட்டும்
நீ நலமாக வாழு!
                     - யாரோ 

Monday, 16 May 2022

மறுப்பு



ஊரெல்லாம் உன் வம்பிருக்க
நீ வீடு வந்து சேரும்வரை
வாசலிலே நான் காத்திருக்க
காலையும் மாலையும்
கீச்சலில் கழிக்கிறாய்
மதியநேரத்தில்
நேர்காணல் தருகிறாய்
மிச்சநேரத்தில்
தொ(ல்)லைபேசி அழைப்பு 

காய்கறி வாங்கவும்
துணிமணி துவைக்கவும்
துளியும் உதவாமல்
கண்நோக்கி களியாமல்
காதல்மொழி பேசாமல்
இடைவளைத்து கொஞ்சாமல்
முகம் பிடித்து கெஞ்சாமல்
பிறந்தநாளும் மணந்தநாளும்
வருடந்தோறும் மறக்கிறாய்
கனவு கலைந்து விழித்தேன் 

உன் பின்னால் வந்து
ஒரு பயனும் இல்லை
எட்டியே நின்றுவிடு
மணவாளன் ஆசைவிடு
உன் மணவாட்டி ஆகி
மருகிநிற்க ஆசையில்லை
தள்ளிநில் என்னவனே
தவறியும் மணக்காதே
தொழிலையே தொழுதுசெல்
இருவருக்கும் நல்லது

Friday, 13 May 2022

வெட்கம்

வெட்கம்

கருஞ்சிவப்பு ஆப்பிள் 
கையில் எடுத்தேன்
உன் கன்னம் ஞாபகம்
வந்ததால்
நறுக்க மனமின்றி
கத்தி நழுவியது
ஆப்பிளுக்கு வயது
உன்னைவிட அதிகம்
வரிகளும் புள்ளிகளும்
அதிகமாய் இருந்தது
மாசற்ற உன் கன்னம்
ஆப்பிளை ஜெயித்தது

மஞ்சள் கண்டதும்
உன் கண்கள் ஞாபகம்
நிறத்தை தானமாக்கி 
மஞ்சள் ஆனது
கர்ணணுக்கு தம்பி
கண்ணாடி தள்ளும்
நடுவிரல் அழகு
மீசையின் மையம்
கீழ்உதடு மையம்
கட்டைவிரல் நகர்ந்து 
அடிக்கடி அழுத்தியது
பதட்டமா வெட்கமா

மேல்வரிசை பற்கள்
பாதி மட்டும் தெரிய
விரல்நகம் கடித்து
சிரிக்கின்ற அழகு
ஆணிண் வெட்கம்
அவ்வளவு அழகு
விசிறிக்கும் காற்றுக்கும்
பணியாத கேசம்
உன் விரலுக்கு பணியும்
மாயமென்ன சொல்






,

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...