Wednesday, 12 November 2025

குரு

பொங்கல்...

பானையில்
பொங்கும்
என அம்மா
காத்திருக்க

ரகசியமாய்
தன் முகத்தில்
பொங்கவைத்தாள்
புன்னகையை!

அருகிலுள்ள
கோரைப்புற்கள்
குசுகுசுவென
பேசிக்கொண்டன!

திடீரென
பிங்க் ரோஜா
தங்களருகில்
எப்படி
முளைத்ததென!

நிரம்பி
வழிகிறது
புன்னகை
அவள்
அன்றாடம்
புழங்கும்
வங்கிப்
பணத்தை போல!

சேமிப்பு
முதலீடு
பொருளாதாரம்
சிலபஸ்ஸில்
பிகெச்டி
வாங்கிய குரு!

தன் துறையில்
சீமாட்டி!
தோழியரின்
சிரிப்பூட்டி!

12/11/2025 : 6.10 PM 


வெகுதூரம்
சுமந்து 
வந்த
என்னை
தூரத்தில்
தள்ளி வைத்து

நேற்று
முளைத்த
அருகம்புல்
அருகில்
பொங்கல்
வைக்கிறாள்
இந்த குரு....

கோபித்துக்கொண்டது
அவள் கார்
மருமகளை
வெறுக்கும்
மாமியாரைப்போல! 

தென்னையும்
சலித்துக்கொண்டது
ஆமாம்
கார் அக்கா
நாமெல்லாம்
ஆகாதவர்
ஆகிவிட்டோம்! 
நமக்கு
பின்வரிசை
அருகம்புல்லுக்கு
முன்வரிசை!

அடுத்த 
வெய்யில்
காலத்தில்
நான்
அவளுக்கு
இளநியும்
தரமாட்டேன்
தேங்காயும்
தரமாட்டேன்

கோபத்தில்
தென்னை
பொரிந்து 
தள்ளியது!

12/11/2025 : 6.36 PM 
 

பார்கவி

சோழர் கால
சிற்பமொன்று
தூணிலிருந்து
வெளிப்பட்டது!

சோழச்சிற்பி
கலையில்
சிறந்தவன் தான்

சிற்பத்திற்குள்
பார்கவியை
மறைத்து
பிறந்தநாளில்
வெளிவர
வைத்துள்ளான்!

Scheduled delivery
அப்பவே
அறிந்து
அமேசானுக்கு
அப்பன் ஆனான்!


நவீன 
அசோகவனத்தில்
ரெங்கனுக்காக
காத்திருக்கும்
சீதையோ நீ?


பார்கவி

பெற்ற இரண்டையும்
பெறாத இரண்டையும்
மொத்தமாக சுமக்கும்
அன்னை தெரசா!

லதா மங்கேஷ்கர் பாதி
ஸ்வர்ணலதா மீதி
கலந்து செய்த
கலவை!

பலமொழிப் பாடகி
என்பதைத் தாண்டி
பல மெட்டுகளில்
பாடி அசத்தும்
டி - ப்ளாக்
கானக் குயில்!

நச்சென்ற காமெடி
நேரத்திற்கு
ஏற்றாற்போல்
சட்டென்று
கொட்டும் கிரேஸி!

பழமை விடாது
புதுமை விடாது
இரண்டையும்
தொடரும்
புதுமைப்பெண்!

இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள் பார்கவி!

நூறாண்டு வாழ்க
நோய்நொடியின்றி வாழ்க!

❤❤💐💐💐

12/11/2025 : 12.28 PM / Wednesday 

Wednesday, 5 November 2025

சுகந்தி

சுகவாசி
சுகபோகி
சுதந்திர தேவி! 

எனது வலியை
அறிந்தவள்
வறுமையை
பகிர்ந்தவள்
செழிப்பில்
மகிழ்ந்தவள்

அகம் புறம்
அனைத்தும்
அறிந்தவள்

உரிமையை
தருவாள்
எடுப்பாள்
என்னிடம்

பேசிப் பேசி
தீர்ப்பாள்
பேசாமல்
தவிப்பாள்!

எனக்காக
என் கணவரிடம்
வாதாடும்
ஒரே
வக்கீல்!

வாகனங்களை
சோதனையிட்டு
ஓட்டுனர்களை
ஓனர்களை
திணர வைக்கும்
கோடீஸ்வரி!

அடுத்த
பிறந்தநாளுக்குள்
ஆர்டிஓ
ஆகிவிட
இந்தப் பிறந்தநாளில்
இறைவனை
வேண்டுகிறேன்.

இனிய
பிறந்தநாள்
வாழ்த்துகள்
சுகந்தி!
❤❤❤💐💐💐

Tuesday, 4 November 2025

மேனகா

எடை கூடாத
இடையழகி!

எள்ளுப்பூ
மூக்கழகி!

தங்க
நிறத்தழகி!

தண்மையான
சிரிப்பழகி!

இவளிடம்
முருங்கையும்
வழிமுறை
கேட்கும்
முத்தாமல் இருப்பது
எப்படியென!

மேனகையின்
மோகனத்தில்
மயங்காத
மயில் உண்டோ?

மூன்றாம் மாடி
ஏறவே
மூச்சிரைக்கும்
தோழியர்
கூட்டத்தில்
டேபிள் டென்னிஸ்
விளையாடி
மாநில அளவில்
உயர்ந்தவள்!

உள்ளத்தை
இல்லத்தை
அழகாக
வைத்திருப்பாள்!

காஞ்சிபுரம்
சேலைகளை
குத்தகையில்
எடுத்திருப்பாள்!

அழகே
அறிவே
நீடூழி வாழ்க!

இனிய
பிறந்தநாள்
வாழ்த்துகள்
மேனகா!

❤❤❤

சிலை
ஏன்
கோவிலுக்கு
வெளியே 
நிற்கிறது?

இதுதான்
இக்கோவிலின்
சிறப்பம்சமோ? 

😄😄😄


Monday, 3 November 2025

கௌசி - வசு : இரட்டையர்

புளியங்காயும்
மாங்காயும்
வெள்ளரிக்காயும்
இலந்தைப்பழமும்
கல்லில் கொட்டி
உப்பும் மிளகாய்ப்பொடியும்
போட்டு
பகிர்ந்துதின்ற
இளமைப்பருவம்!

பத்தாம்வகுப்பு
பன்னிரெண்டாம் வகுப்பு
அரசுத்தேர்வு
பயத்தை
பாடக்குறிப்புகளை
பகிர்ந்துகொண்ட
பள்ளிப்பருவம்!

கல்லூரியில்
பட்டாம்பூச்சியாய்
சிறகடித்து
பறந்ததுவரை
எத்தனை எத்தனை
நினைவுகளின் சேமிப்பு
இருவருக்கும்!

போதாது என்று
திருமணத்திற்கு
பின்னும்
தக்காளியும்
சுரைக்காயும்
கறிவேப்பிலையும்
வெண்டைக்காயும்
அன்றாடம்
கைமாற்றும்
மகாபாக்கியசாலிகள்
கௌசியும் வசுவும்!

வேர்கள் அற்ற
வேற்றுமண்ணில்
வேராகவும்
நீராகவும்
ஒருவருக்கொருவர்
ஆதரவு!

முன்ஜென்ம பலனோ
முன்னோர்கள் வாழ்த்தோ
ஏதோ ஒன்று
பாலமாக்கி
இணைத்தது
இவ்விருவரை!

இன்னும் பல்லாண்டு
இருவரும்
இணைந்திருந்து
நட்புக்கு இலக்கணம்
எழுதிடுவீர் இருவரும்!

💐💐💐❤❤❤


Thursday, 30 October 2025

பூங்கொடி

பிரியாணியை
நேசிக்கும்
பெண்ணும் நீ!

பிரியாணியே
நேசிக்கும்
பெண்ணும் நீ! 

அலுவலகத்தில்
மேலதிகாரி
திட்டினாரா
பிரியாணி!

வீட்டில்
ஆத்துக்காரர்
திட்டினாரா
பிரியாணி!

விசேஷம்
இருந்தாலும்
பிரியாணி!

விசேஷம்
இல்லையென்றாலும்
பிரியாணி! 

பிரியாணி ப்ளூஸ்
ஷேர் விலை
பூங்கொடியால் தான்
ஏறியதாக
நம்பத்தகுந்த
வட்டாரங்கள்
சொல்கின்றன
ஸ்ரீஜா.... 😂😂😂

சாரி பூங்கொடி... 😂😁😁

Monday, 27 October 2025

அம்மு எனும் அம்மா

அம்மா
தேடாதவரை
எதுவும்
தொலைவதில்லை

அம்மு
சொல்லாதவரை
தரவு
தொலைவதில்லை

பிறந்தநாள்
திருமணநாள்
நிழற்படம்
என
அத்தனையும்
சேகரித்து
தேவைப்படும்போது
தரும்
தரவுப்பெட்டகம்.

நினைவுத்
துகள்களாய்
எங்களை
சுமந்து
அவ்வப்போது
மகிழ்ச்சி
துளிகளைத்
தூவும்
தரவுமேகம்!

இன்பத்தை
எமக்கு அருளி
துன்பத்தை
தனியாக
எதிர்கொண்ட
தைரியசாலி!

அம்மாக்களுக்கு
அம்மா ஆன
அம்மம்மா
எங்கள் அம்மு!

❤❤

விஜி

உன் வீட்டு
சமையலறை
நாடாளுமன்றமா
விஜி?

எல்லாருக்கும்
இட ஒதுக்கீடு
சரிசமமாக
தந்துள்ளாய்!

வெண்டைக்காய்
கத்தரிக்காய்
ராஜ்மா
கருணைக்கிழங்கு
பாகற்காய்
துவையல்
ரசம்
புளியோதரை
என்று
எல்லோருக்கும்
காய்கறித்தொகை
கணக்கெடுப்பு
நடத்தினாயா?

கறியும் காயும்
சரிசமமாக
பங்கி
பொதுவுடைமைக்
கொள்கையை
சமையலறையில்
ஆரம்பித்தாய்! 

Sunday, 26 October 2025

விஜய கௌரி

கன்னத்தில் 
ததும்பிய
இளஞ்சிவப்பை
கடனாகத்
தந்தாள்
கௌரி! 

தரைக்கும்
தாரைவார்த்து
மலருக்கும்
கலர் தந்தாள்! 

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...