Thursday 22 December 2022

குறள்_1127:கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

கண்ணன்
இருக்கை
கண்களில்
என்பதால்
கவனம் பல
கொண்டேன்
மையிட்டால்
கண்கரித்து
அவனுக்கு
கண்ணீர்
வருமோ?
யோசித்து
தவிர்த்தேன்!
சிகைக்காய்
தேய்த்து
குளித்தால்
அவன் கண்
எரியுமென்று
அரப்பை
தேர்ந்தெடுத்தேன்!
கண்ணுக்கு
நல்லதென
கேரட்டும்
பப்பாளியும்
தேடித்தேடி
சாப்பிட்டேன்!
வெயிலில்
அவனுக்கு
கண்கூசும்
என்று
கலைஞரிடம்
கண்ணாடி
கடனாக கேட்டேன்
வெளியே சென்று
திரும்பிவந்து
வெள்ளரிக்காய்
ஒத்தடம்
கண்ணனுக்கு
தந்தேன்!
இதற்கெல்லாம்
பரிசாக
உன்னையே
தருவாயா???

Friday 16 December 2022

100 DAYS OF YATRA

#100DAYSOFYATRA
நாட்களா
நகர்ந்தது?
இல்லை
பாஜகவின்
இதயம்
நகர்ந்தது!
தூரங்கள்
முடிந்ததா?
இல்லை
மக்களிடையே
பகைமை
முடிந்தது!
மாநிலங்கள்
மட்டுமா
கடந்தார்?
மக்களின்
மனதையும்
கடத்தினார்
ராகுலின்
பாதங்கள்
நடந்த அடிகளை
காட்டிலும்
கூடுதல்
அல்லவா
அவர் சந்தித்த
மக்களின்
எண்ணிக்கை!
நூறு ஆயிரமாகி
லட்சமாகி கோடியாகி
எண்ணமுடியா
இலக்கம்
எட்டியதை
எதிரிகளின்
கதறலில்
அறியமுடிந்ததே!

அன்பு தலைவனே
உன் சட்டையும்
செருப்பும்
பேசுபொருளாக
புன்னகையால்
எப்படி கடந்து
போகமுடிந்தது!
அன்னை சோனியா
பாலுக்கு பதிலாக
பொறுமையை
ஊட்டினாரோ

காங்கிரஸ்
இல்லாத
பாரதம்
என்றோருக்கு
பாரதம்
முழுக்க
காங்கிரஸ்
மட்டுமே
என்று எதிரிக்கு
உணர்த்தியது
உன் பின்னே
வந்த மக்கள் வெள்ளம்!

விளைபொருள்
விலை கிடைக்காத
விவசாயிக்கு
நீ விடிவெள்ளி
ஆனது
உலகம் அறிந்தது!

இந்த நூறு
நாட்களில்
தலைவா
நீ பேசாத
பொருளுண்டோ?
கலாச்சாரம்
மொழி மதம்
பொருளாதாரம்
விலைவாசி
வேலையின்மை
அத்தனையும்
நகநுனியில்
வாய்மொழியில்
திரையின்றி
காகிதமின்றி
திகட்ட திகட்ட
எதிரிகள்
திகைக்க
பேசினாய்

உன்னை அளவின்றி
நேசிக்கிறோம்
இறைவனாய்
பூஜிக்கிறோம்
உன் சரித்திரம்
நிலைக்கட்டும்
சாதனை நீடிக்கட்டும்!

Wednesday 14 December 2022

#குறள்_1129 :மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்,பலர்காணத் தோன்றல் மதி. 

இந்தாம்மா
நிலாப்பொண்ணு
இது ஒரு மூஞ்சினு
தூக்கிட்டு
மாசத்துல
பதினஞ்சுநாள்
வந்து நிக்கிற
உனக்கெல்லா
வெக்கமே
இல்லியா
என்னிக்காச்சும்
எம்பொஞ்சாதி
மூஞ்சி பாத்துக்கீறே?
அல்லிபூ கண்ணழகி
ஆவாரம்பூ  நிறத்தழகி
அவ இருக்கும்போது
வெளியில வரலாமா
ஓடிப்போ வூட்டுக்குள்ள
ஈனமானம்
உனக்கிருந்தா!

Tuesday 13 December 2022

#குறள்_1118 : மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்,காதலை வாழி மதி.

அதிகாலை
ஐந்தரைக்கு
Good morning di
அடுத்த ஒருமணி
நேரத்தில்
என்னடி பண்றே
குறுஞ்செய்தி
திரையில் கண்டு
ஜொலிக்கும்
என்னவளின்
முகம் விடவா
நிலவே நீ
பிரகாசித்துவிடமுடியும்
அப்படி நடந்தால்
அவளோடு
சேர்த்து
உன்னையும்
நேசிப்பேன்!

Friday 9 December 2022

#குறள்_1114 : காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்,மாணிழை கண்ணொவ்வேம் என்று. 

சன்னமாய்
தலைகவிழ்ந்த
குவளையை
கண்டதும்
உறுதிசெய்தேன்
நீ இந்தவழியில்
பயணித்திருக்க
வேண்டும் என்று!
உன் கண்களை
கண்டு அதற்கு
காய்ச்சல் வந்ததோ!
கண்ணாடி கண்களின்
ஒளிபட்டு கூசி
தலைகவிழ்ந்ததோ!
உன் கண்களால்
பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை
கூடிக்கொண்டே
போகிறது!

Thursday 8 December 2022

குறள் - 1113 : முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்,வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

என்னவளே
மூங்கில்
நேற்று
முறையிட்டது
உன் அழகிய
தோள்களுக்கு
முதல் பரிசாமே
பாவம் மூங்கில்
ஆறுதல் பரிசும்
தவறவிட்டதாமே
இணைப்பு
கணுக்கள்
இறக்கிவிட்டனவோ
மூங்கிலுக்கு பரிசை
ஜூரியில் என்ன
காவிக்காரர்களா
பச்சை நிற
மூங்கிலை தவிர்த்து
உன் மஞ்சள்
நிற தோளை
தேர்வு செய்தனர்
என்னை போலவே
அவர்களும்
உன் தோள்வழி
வழுக்கிவிழுந்தனரோ

முத்து வந்து
என்னிடம்
கேட்டான்
உன் காதலி
எத்தனை வருடம்
சிற்பிக்குள்
இருந்தாள்
இவ்வளவு
வெண்மையாய்
அவளின் பற்கள்
கடலோரத்தில்
உன் சிரிப்பை
பார்த்தானோ

நந்தியாவட்டையுடன்
என்ன தகராறு
அது வந்து
சிலிர்த்தது
நான்தரும்
மையால் தான்
உன்காதலியின்
கண்கள் அழகானது
மறக்கவேண்டாம்
என்று சொல்ல
சொன்னது

பஞ்சுவும்
இழுத்தது
பஞ்சாயத்து
உன் மேனி
அதைவிடவும்
மென்மையாமே

என்னை மட்டும்
வதைக்காமல்
எல்லோரையும்
மல்லுக்கு
அழைக்கிறாய்
நான் எத்தனை
பேரை சமாதானம்
செய்வேன்?

Wednesday 7 December 2022

குறள்_1112 : மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்,பலர்காணும் பூவொக்கும் என்று.

வள்ளுவரே
உம் பாட்டில்
பொருட்பிழை
உண்டு!
இருநாளில்
வாடும்
சாதா மலரோடு
என்னவளின்
கண்மலரை
எங்ஙனம்
ஒப்பிடலாம்?
உயிர்தந்து
உயிர்நீக்கும்
ஜீவமலரை
குறைத்து
கூறலாமா?
நோயாகி
மருந்தாகும்
அற்புதம்
அன்றோ
அவள்கண்கள்!
விரகமாகி
விருந்தாகும்
உணவன்றோ
அவள் கண்கள்!
பிழையை திருத்து
இல்லையேல்
பொற்றாமரை
குளத்தில்
மீண்டுவர
நேரிடும்!

Tuesday 6 December 2022

குறள்_1110 :அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்,செறிதோறும் சேயிழை மாட்டு.


River & Woman : 

You never touch 
the same water twice
because flow is changing
every second in a river!
same as my lady love
who refresh me differently
one after another day!

#குறள்_1111# நலம்புனைந்துரைத்தல் நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்,மென்னீரள் யாம்வீழ் பவள்.

மென்மையும்
வண்ணமும்
உனக்கு தான்
என்றெண்ணி
கர்வம் கொள்ளாதே
அனிச்சமே!
உன்னை வெல்லும்
மென்மை
என்னவளின்
உதட்டிற்கு உண்டு!
அவளின்
கருநீல கண்
தங்கநிற தோள்
தும்பை பல்
விடவா உன்
வண்ணம் அழகு
உன் ஐந்திதழை
காட்டிலும்
அவளின்
செவ்விதழே
சிறந்தது!
கர்வத்தை
குறைத்து
என்னவளை
துதி பாடு!

Thursday 1 December 2022

#குறள்_1106 : உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு,அமிழ்தின் இயன்றன தோள்.

அமுல்
ஆவின்
எந்த பாலில்
குளிக்கிறாய்?
தொட்டதும் 
புத்துணர்ச்சி
விலைமிகுந்த
நீ குளிப்பதால்
பால்விலை
விண்ணை 
தொடுதோ?

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...