Tuesday 28 February 2023

குறள் 1195

என் பொழுதின்
பாதிகளை
உன்னோடு
கழிக்கிறேன்
நிமிடங்கள்
கூட கழிவதில்லை
நீயின்றி
உன் நினைவின்றி
வேலைகளை
தள்ளிவைத்து
உன்னை
கைகளில் ஏந்தி
சீராட்டுகிறேன்
ஆனால் பதிலுக்கு
நீ தருவது
என்னவோ
தலைவலியும்
தூக்கமின்மையும்
என்மீது உனக்கு
அன்பே இல்லையா
அக்கறையே இல்லையா
இதயமில்லாத போனே!

Comments : 

Monday 27 February 2023

குறள் 1194


நாள்முழுதும்
வாராத
குறுஞ்செய்தி
சொல்லும்
நான் உனக்கு
முக்கியமில்லை
என்பதை!

தாமதமாய்
வரும் பதிலில்
தெரியும்
என் கேள்விகள்
உனக்கு
பிடிக்கவில்லை
என்று!

என்சொல்லையும்
செயலையும்
பாராட்ட ஆயிரம்
மனிதர்கள்
இருந்தாலும்

ஆன்றோரே
புகழ்ந்தாலும்

நீ சொல்லும்
ஒற்றை வார்த்தை தானே
எனது பொக்கிஷம்!

உன் குரல்தான்
எனக்கு சுப்ரபாதம்
என்றாலும்

Pixel by Pixcel
உனை பிரித்து 
ரசித்தாலும்

உலகம் நீயென
உன்னையே
சுற்றினாலும்

நான் உன்
இதயத்தில்
ராணியில்லை
என்றால்
என்னைவிட
துரதிஷ்டசாலி
யாரும்
இருக்கமுடியாது!

உலகமே 
சொன்னது
நான்
அதிஷ்டசாலி
என்று!

ஆனால் 
உன் இதயம்
நுழையமுடியாத
துரதிஷ்டசாலி
என்பதை
நீயும் நானும்
அன்றி
வேறொருவர்
அறியார்!


Sunday 26 February 2023

குறள் : 1193


இலையுதிர்காலத்தில்
இலையிழந்து
களையிழந்து
பிரிவால் வாடும்
மரங்களே
ஆணிவேர்
இருப்பதை
மறந்தீரோ
அடுத்த பருவத்தில்
துளிர்விட்டு
செழிக்கவைக்க
நானிருப்பதை
வேர் இருப்பதை
வேர் என
காதல் இருப்பதை
மறந்தீரோ
காதலினால்
மீண்டும்
சேர்வோம்
பிரிவு தற்காலிகமான
பருவநிலை தானே
காத்திருந்து
காதலிப்போம்!

வெயில்காலத்தில்
வறண்டுபோன
குளத்தைகண்டு
கலங்கமாட்டேன்
அடுத்து வருகிறதே
மழைக்காலம்
நிரம்பிவழியும்
நீரில் நான்
இன்பமாக 
மிதந்திருப்பேன்
வெயிலும் மழையும்
இயற்கையெனில்
பிரிவும் சேர்வும்
இயற்கைதானே
பிரிவுக்காக நான்
வருந்தபோவதில்லை
வரப்போகும்
இன்பமழைக்காக
காதலோடு
காத்திருப்பேன்!

அரியணையில்
அமரமுடியாமல்
அடுத்தடுத்து
தோற்றாலும்
மக்கள் மீது
கொண்ட நம்பிக்கை
அடுத்த தேர்தலில்
வெல்லவைக்கும்
காதலர் பிரிவும்
அப்படித்தான்
அவர்மீது வைத்த
நம்பிக்கை
அடுத்த வருடத்தில்
இணைந்திட 
வழிவகுக்கும்.
தேர்தலில் தோல்வியும்
காதலரின் பிரிவும்
நிரந்தரமானதல்ல!

Comments : 

Saturday 25 February 2023

குறள் 1192

அரிசியும் கோழியும்
சந்திப்பதால்
கிடைக்கும்
சுவையான 
பிரியாணி போல

தேயிலையும்
ஏலக்காயும்
சந்திப்பதால்
கிடைக்கும்
சுவையான 
தேநீர் போல

கடலைமாவும்
சர்க்கரையும்
சந்திப்பதால்
கிடைக்கும்
மைசூர்பாக் போல

அவனும் அவளும்
சந்தித்து இன்புறுதல்
வானம் பார்த்த
பூமிக்கு கிடைத்த
மழையாக இருக்கிறது

சோனியா காந்திஜி

உண்மையான தேசபக்தி
உம்முடைய பேச்சில்
விதவிதமாய் ஆடை
வேளைக்கொரு ஆடை
அணியாத தேசபக்தி!

தேசத்தின் பிரச்சனை
தேசமக்களின் பிரச்சனை
எல்லையின் பிரச்சனை
எளியோரின் பிரச்சனை
உம்மைவிட ஆழமாக
அறிந்தோர் யாருண்டு?

மகனின் அன்பு

என்ன தவம் செய்தனை!
சோனியாம்மா என்ன தவம் செய்தனை!
பார் போற்றும் ராகுல் உம்மை
அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை!
comments : 

Friday 24 February 2023

குறள் 1191


பண்டிகைக்கு
வாங்கி தந்த
பட்டு அல்ல
அவர் அன்பு
அதை கட்டும்போது
சொல்லும் வார்த்தை
ஜொலிக்கிறடி
என்பதில் மின்னும்
அவர் அன்பு

வாங்கி தந்த
நகையணிந்து
கோவிலுக்கு
போகையில்
அம்மனோடு
போட்டியாடி என
நகைக்கும்போது
மிளிரும் அவர் அன்பு


சளிபிடித்து
படுக்கையில்
ஆவிபிடி என்று
சொல்லி
காலருகில்
வைக்கும்
கொதிநீரில்
தெரியும்
அவர் அன்பு

நேசம் சமமாக
கொடுத்தும்
வாங்கும்
அன்பர் உண்டெனில்
விதையற்ற கனியாக
இனிக்கும்
அந்த உறவு....

Thursday 23 February 2023

குறள் : 1190

என்னை
ஏமாற்றி
சாக்லெட்
பிடிங்கிதின்ற
அவனை
ஏமாற்றுக்காரன்
என ஊர்
பழிக்காது எனில்
நான் ஏமாளி
பட்டத்தை
சிரிப்போடு
ஏற்கிறேன்!

ஆசைகாட்டி
ஓட்டுவாங்கி
பதவியில்
அமர்ந்தபின்
ஏமாற்றி 
பிழைப்பவரை
ஏமாற்றுக்காரன்
என மக்கள்
சொல்லார் எனில் 
நான் இளிச்சவாய்
குடிமகள் என
பேர்வாங்க
தயங்கமாட்டேன்!

Wednesday 22 February 2023

குறள் : 1189

பிரிவையே 
பொறுத்த எனக்கு
பசலை ஒன்றும்
பெரிதல்ல!

உயிரின்றி
உடல் வாழாதாம்
யார் சொன்னது
இதோ நான்
வாழ்கிறேனே!

தூரம் இருப்பதால்
நிலவு சலித்திடுமா
சூரியன் கசந்திடுமா

நலமாக நீ இருக்க
டேட்டாவாகி
வருவேன்
வீடியோவாகி
வருவேன்

பசலை தான்
பரிசெனில் 
தயக்கமின்றி
ஏற்பேன்!

Comments received :

Monday 20 February 2023

குறள் : 1187

வள்ளுவரே
என் காதலர்
புவியீர்ப்பு
விசையாய்
இழுப்பவர்தான்
ஆனால்
அவரிலே
மயங்கி கிடந்து
பசலை கண்டு
பயந்து
அவரோடு
இருந்தால்
எங்கள் வயிரும்
வாழ்வும்
நிறைந்திடுமா?
நீர் எம் பெண்குலத்தை
வலிமையற்றவராய்
பொறுமையற்றவராய்
பொறுப்பற்றவராய்
கருதிவிட்டீரோ?
பசலையை ஏன்
ஆணுக்கு தரவில்லை?

Comments: 

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...