உன் விரல்கள் மீட்டும் வீணை இசையை தினந்தோறும் கேட்கலாம் திகட்டாது ஆனால் உன் தோள் சாய்ந்து அதை கேட்கும்போது இன்னொருமுறை ஜனனிப்பேன் உன் இடப்புற தோள் காலியாகத்தானே இருக்கிறது என்னையும் ஏந்திக்கொள்
கடல் அழகு மலை அழகு என்பர் காதலி உனைக் காணாதோர்! குழல் இனிது யாழ் இனிது என்பர் கண்ணே உன் குரல் கேளாதோர் மல்லிகைக்கு வாசம் உன் தலைசேர்ந்த பின்புதான் ஜிலேபி உன் எச்சில்பட்டபின் அதிகமாய் இனித்தது உன் மெய்யே பேரின்பம் உலகத்துக்கே சொல்லிவைப்பேன்!
நிலம் உன் உடல் நீர் உன் கண்கள் காற்று உன் சுவாசம் ஆகாயம் உன் கூந்தல் நெருப்பாய் உன் நினைவுகள் என் ஐம்பூதங்களும் நீ!
பகல்முழுதும் சாலை சாக்கடை சுத்தம் செய்தவன் தன்னுடல் எங்கும் அழுக்காய் திரிகிறான் டாஸ்மாக் பரிசு நடையை தளர்த்தும் குடும்பம் வளர்கிறதோ இல்லையோ டாஸ்மாக் வளர்ச்சி அபாரம் தன் கழிவறையை தானே சுத்தம் செய்த காந்திகள் இல்லாத தேசத்தால் இந்த வேலை ஸ்கேவஞ்சர் மெசின் எல்லா தேர்தலிலும் வாக்குறுதி பறக்கிறது கோடீஸ்வரனுக்கு மானியம் கோடிக்கணக்கில் போகிறது உனக்கு மெசின் வாங்கத்தான் அரசிடம் காசில்லை இருந்தாலும் நீ தனவான் உன் காசு தானே பலருக்கு ஊதியம் அதென்ன உன்பெயர் கருப்புசாமி வெள்ளைசாமி என்றே ஒலிக்கிறது அய்யர் அய்யங்கார் முதலியார் செட்டியார் கேட்டதேயில்லை பெரியாரே மீண்டும் வா பாரதியே பிறந்து வா உங்கள் கடமை இன்னும் பல உண்டு!
பாழடைந்த கிராமத்துவீட்டை பட்டணத்து பேரன் பார்வையிட போனதுபோல வெள்ளையரை எதிர்த்த பாட்டன்கள் வாழ்ந்தவீட்டை கடலூர் சிறையை கொள்ளையரை எதிர்க்கும் பேரன் நீ பார்க்கபோனாயோ 65 நாட்கள் அடைபட்டு ஆசி வாங்கிவந்தாயோ
வெள்ளுடை வேந்தன் வெண்தாடி வீரன் பெரியாரின் வாரிசாய் நீதிமன்ற வாசலில் நிற்க கண்டேன் நீதிகேட்டு போனாயா இல்லை நீதித்துறைக்கே பாடம் புகட்ட போனாயா
மதுரை மன்ற நீதிதேவதை மெதுவாக கிசுகிசுத்தாள் சட்டம் படிக்காமல் இத்தனை பேசுகிறானே சட்டம் படித்திருந்தால் நீதிதராசை என்னிடம் இருந்து பிடிங்கியிருப்பான் அவளின் பாராட்டு நீதியரசர்களுக்கு பொறாமையை தந்திருக்கும் அதனாலோ என்னவோ உனக்கெதிராய் நீதிவழங்கினர்
I standby what I said இந்த சொல்லாடல் மந்திரமானது இளைஞர்கள்மனதில் சொக்கித்தான் போனார்கள் சொல்வேந்தன் துணிவு கண்டு!
மன்னிப்புகேட்கமறுத்து பிடிவாதமாய் நின்றது மக்களின் மனதில் மன்னனாக வைத்தது
மதத்தால் சிதறுண்ட இந்தியாவை இணைக்க ராகுல்காந்தி என்ற ஒற்றைசொல் போதுமானதாய் இருப்பது போல இடத்தால் சிதறுண்ட எங்களை இணைக்க சவுக்குசங்கர் என்றபெயர் போதுமானதாய் இருந்தது பெயரே தெரியாமல் முகமே அறியாமல் மனதால் இணைந்து அண்ணனாக அக்காவாக தம்பியாக தங்கையாக வாராவாரம் உன் புகழ் மறவாது பாடினோம் ஒவ்வொருவர் குரலிலும் உன் பெயரே ஒலித்தது இடையில் சில உபிக்கள் மிதிபட்டும் சென்றனர்
Any updates any updates எல்லோர் DM லும் ஒரே கேள்வி எப்ப வரார் எப்ப வரார் எல்லோர் வாயிலும் இதே கேள்வி அவர் நலமா அவர் நலமா அனைவரும் கவலைப்பட்டனர் உன்னைநோக்கி உலகையே சுழல வைத்தாய் Twitter ல் Trendingஆய் உன் பெயரே மிதந்தது எங்கள் மனதை ஆட்டிபடைத்த மந்திரக்காரன் நீ மாயக்கண்ணன் நீ
அலிபாபாவும் 40 திருடர்களும் மறுபடியும் புகழ்பெற்றது
நிலசுரண்டல் நிதிசுரண்டல் நீதிசுரண்டல் அனைத்துக்கும் எதிராய் உன் கர்ஜனை தொடரட்டும் வளரட்டும் உன் ஆயுள் வாழட்டும் உன் புகழ்
அன்பு நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கபடில்லா நட்பு கழுபிணியிலாத உடல் சலியாத மனம் தாளாத கீர்த்தி மாறாத வார்த்தை தொலையாத நிதி கோணாத கோல் துன்பமில்லா வாழ்வு அத்தனையும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!
உன் இதயத்துடிப்பை கேட்டு பழக்கப்பட்ட பேனா மை திறவாமல் மௌனியாய் இருக்கிறது
உனக்கு தெளிந்த பார்வை தந்த கண்ணாடியோ தூசி படர்ந்து தூங்குகிறது
நீ விரும்பி அணியும் டைட்டன் வாட்ச் ஓட விருப்பமின்றி உறங்கிக்கொண்டிருக்கிறது உன் மணிக்கட்டின் பல்ஸ் கேட்டுத்தான் விழிப்பேன் என்று வீம்பாய் படுத்திருக்கிறது
ரெக்கார்டிங் ரூம் கேமரா கண்ணிமைக்காமல் காத்திருக்கிறது உன்னை மட்டுமே படம் பிடிப்பேன் என்று!
உன் வாய்வழி பிரசவிக்க ஊருக்குள் பிரச்சினைகள் பல பதுங்கி கிடக்கின்றன திருவாய்மொழி அலசும் அத்தனை பிரச்சினையும் தீர்வை நோக்கி நகர்கிறதே!
யூ ட்யூபும் புளித்தது உன் குரல் கேட்காமல் ட்விட்டரும் கசந்தது உன் பதிவுகள் இல்லாமல் நீலப்பறவை அன்றாடம் புலம்புகிறது என் நாயகன் எப்போது வருவான் என கடலூர் வந்து உனை கேட்டதாமே அவ்வளவு உறவா அந்த நீலப்பறவை உனக்கு