Wednesday, 7 December 2022

குறள்_1112 : மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்,பலர்காணும் பூவொக்கும் என்று.

வள்ளுவரே
உம் பாட்டில்
பொருட்பிழை
உண்டு!
இருநாளில்
வாடும்
சாதா மலரோடு
என்னவளின்
கண்மலரை
எங்ஙனம்
ஒப்பிடலாம்?
உயிர்தந்து
உயிர்நீக்கும்
ஜீவமலரை
குறைத்து
கூறலாமா?
நோயாகி
மருந்தாகும்
அற்புதம்
அன்றோ
அவள்கண்கள்!
விரகமாகி
விருந்தாகும்
உணவன்றோ
அவள் கண்கள்!
பிழையை திருத்து
இல்லையேல்
பொற்றாமரை
குளத்தில்
மீண்டுவர
நேரிடும்!

Tuesday, 6 December 2022

குறள்_1110 :அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்,செறிதோறும் சேயிழை மாட்டு.


River & Woman : 

You never touch 
the same water twice
because flow is changing
every second in a river!
same as my lady love
who refresh me differently
one after another day!

#குறள்_1111# நலம்புனைந்துரைத்தல் நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்,மென்னீரள் யாம்வீழ் பவள்.

மென்மையும்
வண்ணமும்
உனக்கு தான்
என்றெண்ணி
கர்வம் கொள்ளாதே
அனிச்சமே!
உன்னை வெல்லும்
மென்மை
என்னவளின்
உதட்டிற்கு உண்டு!
அவளின்
கருநீல கண்
தங்கநிற தோள்
தும்பை பல்
விடவா உன்
வண்ணம் அழகு
உன் ஐந்திதழை
காட்டிலும்
அவளின்
செவ்விதழே
சிறந்தது!
கர்வத்தை
குறைத்து
என்னவளை
துதி பாடு!

Thursday, 1 December 2022

#குறள்_1106 : உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு,அமிழ்தின் இயன்றன தோள்.

அமுல்
ஆவின்
எந்த பாலில்
குளிக்கிறாய்?
தொட்டதும் 
புத்துணர்ச்சி
விலைமிகுந்த
நீ குளிப்பதால்
பால்விலை
விண்ணை 
தொடுதோ?

Wednesday, 30 November 2022

#குறள்_1105 : வேட்ட பொழுதின் அவையவை போலுமே,தோட்டார் கதுப்பினாள் தோள்.

உன் விரல்கள் 
மீட்டும்
வீணை இசையை
தினந்தோறும்
கேட்கலாம்
திகட்டாது
ஆனால்
உன் தோள்
சாய்ந்து அதை
கேட்கும்போது
இன்னொருமுறை
ஜனனிப்பேன்
உன் இடப்புற தோள்
காலியாகத்தானே
இருக்கிறது
என்னையும்
ஏந்திக்கொள்
மறுத்தால் 
நீதிமன்றம் 
செல்வேன்
இடஒதுக்கீடு கேட்டு!

Monday, 28 November 2022

#குறள்_1103. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்,தாமரைக் கண்ணான் உலகு.

என் இறைவனின் 
இடையை கட்டிக்கொண்டு
அவன் புஜங்களில்
தலைவைத்து துயிலும்
கணங்களை விடவா
இனிமையானது
ஈசன் படைத்த உலகு?

(அதென்ன வள்ளுவர் எப்போது பார்த்தாலும் பெண்ணைப் பற்றியே புகழ்கிறார். No Partiality)

Saturday, 26 November 2022

செல்ஃபி

நான் என்ன
நகையா கேட்டேன்
விலைமிக்க
ஆடையா கேட்டேன்
அன்றாடம் தவறாது
செல்ஃபி கேட்டேன்
அதை அருள்வதில்
உனக்கேதும்
தடை உளதோ?

#குறள்_1101# குறள்: கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்,ஒண்தொடி கண்ணே உள.

கடல் அழகு மலை அழகு என்பர்
காதலி உனைக் காணாதோர்!
குழல் இனிது யாழ் இனிது என்பர்
கண்ணே உன் குரல் கேளாதோர்
மல்லிகைக்கு வாசம் உன்
தலைசேர்ந்த பின்புதான்
ஜிலேபி உன் எச்சில்பட்டபின்
அதிகமாய் இனித்தது
உன் மெய்யே பேரின்பம்
உலகத்துக்கே சொல்லிவைப்பேன்!

நிலம் உன் உடல்
நீர் உன் கண்கள்
காற்று உன் சுவாசம்
ஆகாயம் உன் கூந்தல்
நெருப்பாய் உன் நினைவுகள்
என் ஐம்பூதங்களும் நீ!

Thursday, 24 November 2022

துப்புரவு தொழிலாளி

பகல்முழுதும்
சாலை சாக்கடை
சுத்தம் செய்தவன்
தன்னுடல் எங்கும்
அழுக்காய் திரிகிறான்
டாஸ்மாக் பரிசு
நடையை தளர்த்தும்
குடும்பம் வளர்கிறதோ
இல்லையோ டாஸ்மாக்
வளர்ச்சி அபாரம்
தன் கழிவறையை
தானே சுத்தம் செய்த
காந்திகள் இல்லாத
தேசத்தால் இந்த வேலை
ஸ்கேவஞ்சர் மெசின்
எல்லா தேர்தலிலும்
வாக்குறுதி பறக்கிறது
கோடீஸ்வரனுக்கு மானியம்
கோடிக்கணக்கில் போகிறது
உனக்கு மெசின்
வாங்கத்தான் அரசிடம்
காசில்லை
இருந்தாலும் நீ தனவான்
உன் காசு தானே
பலருக்கு ஊதியம்
அதென்ன உன்பெயர்
கருப்புசாமி வெள்ளைசாமி
என்றே ஒலிக்கிறது
அய்யர் அய்யங்கார்
முதலியார் செட்டியார்
கேட்டதேயில்லை
பெரியாரே மீண்டும் வா
பாரதியே பிறந்து வா
உங்கள் கடமை
இன்னும் பல உண்டு!

வரவேற்பு

போர்கண்ட சிங்கமே
வருக வருக
வாழும் பாரதியே
வருக வருக
கொள்ளையரை எதிர்க்கும்
பகத்சிங்கே வருக

பாழடைந்த கிராமத்துவீட்டை
பட்டணத்து பேரன்
பார்வையிட போனதுபோல
வெள்ளையரை எதிர்த்த
பாட்டன்கள் வாழ்ந்தவீட்டை
கடலூர் சிறையை
கொள்ளையரை எதிர்க்கும்
பேரன் நீ பார்க்கபோனாயோ
65 நாட்கள் அடைபட்டு
ஆசி  வாங்கிவந்தாயோ

வெள்ளுடை வேந்தன்
வெண்தாடி வீரன்
பெரியாரின் வாரிசாய்
நீதிமன்ற வாசலில்
நிற்க கண்டேன்
நீதிகேட்டு போனாயா
இல்லை
நீதித்துறைக்கே பாடம்
புகட்ட போனாயா

மதுரை மன்ற நீதிதேவதை
மெதுவாக கிசுகிசுத்தாள்
சட்டம் படிக்காமல்
இத்தனை பேசுகிறானே
சட்டம் படித்திருந்தால்
நீதிதராசை என்னிடம்
இருந்து பிடிங்கியிருப்பான்
அவளின் பாராட்டு
நீதியரசர்களுக்கு
பொறாமையை தந்திருக்கும்
அதனாலோ என்னவோ
உனக்கெதிராய் நீதிவழங்கினர்

I standby what I said
இந்த சொல்லாடல்
மந்திரமானது
இளைஞர்கள்மனதில்
சொக்கித்தான் போனார்கள்
சொல்வேந்தன் துணிவு கண்டு!

மன்னிப்புகேட்கமறுத்து
பிடிவாதமாய் நின்றது
மக்களின் மனதில்
மன்னனாக வைத்தது

மதத்தால் சிதறுண்ட
இந்தியாவை இணைக்க
ராகுல்காந்தி என்ற
ஒற்றைசொல்
போதுமானதாய்
இருப்பது போல
இடத்தால் சிதறுண்ட
எங்களை இணைக்க
சவுக்குசங்கர் என்றபெயர்
போதுமானதாய் இருந்தது
பெயரே தெரியாமல்
முகமே அறியாமல்
மனதால் இணைந்து
அண்ணனாக அக்காவாக
தம்பியாக தங்கையாக
வாராவாரம் உன் புகழ்
மறவாது பாடினோம்
ஒவ்வொருவர் குரலிலும்
உன் பெயரே ஒலித்தது
இடையில் சில உபிக்கள்
மிதிபட்டும் சென்றனர்

Any updates any updates
எல்லோர் DM லும் ஒரே கேள்வி
எப்ப வரார் எப்ப வரார்
எல்லோர் வாயிலும்
இதே கேள்வி
அவர் நலமா அவர் நலமா
அனைவரும் கவலைப்பட்டனர்
உன்னைநோக்கி உலகையே
சுழல வைத்தாய்
Twitter ல் Trendingஆய்
உன் பெயரே மிதந்தது

எங்கள் மனதை
ஆட்டிபடைத்த
மந்திரக்காரன் நீ 
மாயக்கண்ணன் நீ

அலிபாபாவும் 40 திருடர்களும்
மறுபடியும் புகழ்பெற்றது

நிலசுரண்டல் நிதிசுரண்டல்
நீதிசுரண்டல் அனைத்துக்கும் எதிராய்
உன் கர்ஜனை தொடரட்டும்
வளரட்டும் உன் ஆயுள்
வாழட்டும் உன் புகழ்










முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...