Tuesday, 17 January 2023

குறள் 1153

தூங்கி எழுந்ததும்
நான்பார்க்கும்
முதல்முகமும்
தூங்கும்முன்
தேடும்
கடைசிமுகமும்
நீ என
தெரிந்தும்
பிரிய நினைத்தல்
சரியா...

என்னடி
கேட்காமல்
சொல்லுடி
கேட்காமல்
மதிமயங்குவேன்
என தெரிந்தும்
தூரம் செல்வது
சரியா....

உறக்கத்திலும்
உன்தீண்டலை
ரசிப்பவள்
நீ அருகில்
இல்லாமல்
தவிப்பேன்
தெரியாதா....

உன் உஷ்ண
மூச்சுக்காற்று
பட்டுக்கொண்டே
இருக்கத்தானே
சிறியபடுக்கையே
வாங்கினேன்
மறந்தாயா...

இடப்பக்கம்
வலப்பக்கம்
திரும்பி படுத்தால்
முகம் காண
முடியாதென
நேராக
தூங்க சொல்வேன்
மறந்தாயா....

இத்தனை தெரிந்தும்
என் மனம் வாட
பிரிந்து செல்ல
நினைப்பது
எப்படி சரியென்று
விளக்கி சொல்!
Comments :

Monday, 16 January 2023

குறள் 1151

(1)
அணிகலன் கேளேன்
பட்டாடை கேளேன்
பகட்டுவாழ்வு கேளேன்
செல்லாதே எனைவிட்டு!
கூரைவீடு கூழ்
கந்தை நீ போதும்
செல்லாதே எனைவிட்டு!
நீ சென்று வென்று
வரும்போது 
நான் இருப்பேனோ
இறப்பேனோ
வேண்டாம் அன்பரே
என்னோடு தங்கிவிடு!

(2)
பிரியும்போது
என் கண்ணும்
உன்னோடு வருமே!
அப்புறம் நான்
இந்த உலகை
எப்படி காண்பேன்?
துணிகள் நிரம்பிய
பெட்டிக்குள்
என் இதயம் 
ஒளிந்து வருமே!
பின் எப்படி
நான் வாழ்வேன்?
நீ பறக்கும்
விமானம் என்
மூச்சுக்காற்றில்
பயணிக்குமே
எங்ஙனம்
நான் வாழ்வது?
ஆதலால்
போகாதே!

குறள் 1152

கண்ணாடி ஜாரில்
கண்ட மிட்டாய்
கையில் கிடைத்து
தின்றபோது
தீர்ந்துவிடுமோ
கவலை போல!

விலை உயர்ந்த
சரக்கை விருந்தில்
குடிக்கும் ஏழை
அடுத்து எப்போ
வாய்க்குமோ என
கவலைபடுவது போல

அத்தான் தரும்
இன்பங்கள்
அடுத்தநாள்
தொடராதே என
சேரும்போதும்
கலங்கினாள்
Otherwise
தைரியசாலி!
Comments : 

Wednesday, 11 January 2023

குறள் : 1147

ஏச்சு எருவாக
போட்டு
பேச்சு நீராக
ஊற்றி
வளர்க்கிறேன்
ஒரு செடி!
கருகுமா
வளருமா
காலம் சொல்லும்
கண்ணே
கூப்பிட்ட வாய்
சனியனே
என்றது
மை டார்லிங்
சொன்ன இதயம்
மயிராய்
நினைத்தது
கண்கள்
குளமானாலும்
கண்ணனை
விடமுடியவில்லை
இருப்பதா
இறப்பதா
காலன் சொல்லட்டும்!

Comments : 

மௌனம் சொல்வது என்ன?

மகிழ்ச்சியா, துக்கமா புரியவில்லை. உன் அமைதியை எப்படி எடுத்துக்கொள்வது நண்பனே?.  உன் பிம்பத்தை எதிரிலும் அருகிலும் பார்ப்பது  பேசுவது மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றே நம்புகிறேன். அதே சமயத்தில் நீ  அரசியல் வானில் சுதந்திர மனிதனாய் பறக்க நினைத்த சமயத்தில் முதுகில் வைக்கப்பட்ட சிறு சுமையாக பொறுப்பாக நினைக்கிறாயோ என்று தோன்றுகிறது. உன்னை உன்னிப்பாக கவனித்தவள் என்ற முறையில் இப்படி நீ நினைக்கக்கூடும் என்று தோன்றுகிறது. குழந்தை வளர்ப்பு நேரம் எடுத்துக்கொள்ளும். பொறுமை வேண்டும். பெண்ணின் துணையோடுதான் இது சாத்தியப்படும். குழப்பத்தில் இருக்கிறாயோ என்று தோன்றுகிறது. அதிகமாக கேள்வி கேட்பது உன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவேண்டும் என்பதற்காக அல்ல. உங்கள் எண்ணத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக.  நீங்கள் என்னை தூரத்தில் நிற்கசொல்லி தடுத்தி நிறுத்தினாலும் கோவித்துகொண்டு
பேசாமல் இருக்கும் கட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டேன். நான் உங்கள் பின்னால் தொடர்ந்துவருவேன். உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும். அடிமையாகி ரொம்ப நாட்கள் ஆகிறது.

Tuesday, 10 January 2023

குறள் : 1146

எப்ப வர்றே
எங்க வர்றே
எப்படி வர்றே
ஒரு மதியவேளை...
அவன் புத்தகம்
அவள் மோதிரம்
பரிசு கைமாறின
புத்தகத்திற்கு
முத்தமிட்டு
டேபிளில் வைத்தாள்
அவன் பாக்கெட்டில்
கைகளை மறைத்தான்
காலேஜ் கேன்டீன்..
பேசினான் அவன்
கேட்டாள் அவள்
நின்றுகொண்டே
ஒரு காபி...
அப்புறம்
ஊர் பேசிகொண்டே
இருந்தது...

நானும் நீலப்பறவையும்......

ட்ரிங்...ட்ரிங்....

' என்னடி ஆறுமணிக்கே?'

'பறக்கவே முடியலை, மயக்கமா இருக்குடி'

'என்னாச்சுடி... சரியா சொல்லித்தொலை..'

'இந்த ஹிம்ரோஸ் தொல்லை தாங்கமுடியலை. அழகழகா கவிதை எழுதி கவுக்க பாக்குறான்டி. அதுவும் இன்னைக்கு செம சூப்பர்ர்ர்'

' பிடிச்சிருந்தா ஓகே சொல்லுடி'

(1/n)

'எங்கப்பன் எலன் மாஸ்க் கொன்னுருவான்டி..நாங்க பறக்கும் இனம்..அவன் நடக்கும் இனம்...ஒத்துவருமாடி?'

'அதெல்லாம் பயப்படாதே, ராஜ்குமார் பாத்துக்குவார்; வக்கீல் பரஞ்சோதி யும் தோஸ்த் தான். பிரச்சினை வந்தா ப்ரண்ட்ஸ் இருக்காங்க'
(2/n)

' சரிடி..ஹிம்ரோஸ்ட்ட நீயே சொல்லு தெய்வா... அவன் கவிதையால் இந்த நீலப்பறவை கவிழ்ந்தாள் என்று...☺☺ '
(3/3)


Comments

Wednesday, 4 January 2023

குறள் : 1140

கழுதைக்கு தெரியாத
கற்பூர வாசனை போல
பந்தர் நா ஜானே
அதரக் கீ ஸ்வாத் போல
அம்மா வைதாள்
பசிக்கல சொன்னபோது
தலைவாரி பூச்சூட
மறந்து வாசலுக்கும்
வீட்டுக்கும் பலமுறை
நடந்தேன்!
என்னடி பித்து இது
தங்கை வைதாள்
அவளுக்கு தெரியாது
அவர்மீது பித்தென!
தலைவலி காய்ச்சல்
தனக்குவந்தால்
புரியம்தானே!

Sunday, 1 January 2023

குறள் : 1137

கரைமீது
கொண்ட
காதலால்
ஓடிவந்த
அலை
ஊர்பழிக்கும்
என்றெண்ணி
அச்சத்தால்
பின்னோக்கி
செல்வதுபோல
அவர்மீது
கொண்ட
காதலால்
உறவு பழிக்கும்
என்றெண்ணி
அச்சத்தால்
தலைகவிழ்ந்தேன்!

அவருக்கு
என்னை
பிடிக்குமோ
பிடிக்காதோ
அறியாமை
துரத்தியதால்
மடப்பெண்ணாய்
ஒதுங்கினேன்!

அவர் காதலோடு
நோக்கினால்
எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி
முன்னின்று
ஒத்திகை பார்த்தேன்!
அவரை கண்முன்னே
பார்க்கையில்
வெட்கத்தில்
ஒளிந்து கொண்டேன்!

அவர் போன்ற
உருவம் ஒன்று
தூரத்தில்
நடக்கையில்
அவரோ
என்றெண்ணி
ஓடிச்சென்று
பார்த்தேன்
அடுத்தவர்
என்றறிந்து
அசிங்கமாய்
உணர்ந்தேன்

அச்சம் மடம்
நாணம்
பயிர்ப்பு
அவரோடு
சேர்வதில்
தடையாய்
இருந்தது!

குறள் : 1133 (version 2.0)

திமிறி திரிந்த
காளைகளை
திண்டு பிடித்து
நிறுத்தினேன்!

சக்கரம் ஒடிந்த
ஊர்த்தேரை
ஒருவனாய்
இழுத்துவந்தேன்!

ஊர் நடுவே
நின்ற
இளவட்டக்கல்லை
ஒரு கையால்
தூக்கினேன்!

பலராமன் நான்
பஞ்சுமூட்டை
உனை தூக்க
பலரிடம்
கெஞ்சுவதேன்?

அதிகாலை
அந்திவேளை
ஆற்றங்கரை
சென்றதில்லை!

அழகான
பெண்கூட்டம்
அலைமோதும்
என நினைத்து
உச்சிவேளை
சென்று
நீராடி வந்தேன்

மாரியம்மன்
திருவிழாவில்
முறைப்பெண்கள்
மஞ்சள் நீர்
தெளிப்பார்
என நாணி
நாள்முழுக்க
வீட்டில் கிடந்தேன்!

பலமும்
நாணமும்
மிகுந்த
ஆண் எனை
மடலேற
வைத்தாளே
மையிட்ட
மானொருத்தி!



முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...