Thursday, 25 November 2021
சலிப்பு

Wednesday, 24 November 2021
தோழிக்கு கடிதம் -3
அன்புள்ள தோழி
தினமும் பூக்கும் இத்தனை பூக்களை என்ன செய்கிறாய்? சாமிக்கு சாத்தி வாடிய மலர்கள், தலையில் சூடி வாடிய மலர்கள், வேஸில் வைத்து வாடிய மலர்கள் அனைத்திற்கும் மறுவாழ்வு தரவேண்டும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?. வாடிய மலர்கள் அத்தனையும் சேர்த்துவைத்து காம்புநீக்கி காயவைத்து, வேலையில்லாத நேரங்களில் மிகவும் 'போர'டிக்கும்போது மிக்ஸி யில் அரைத்து சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். சிறு உருண்டைகளாக்கி மெல்லிய ஈர்க்குச்சியை சுற்றி கைகளால் உருட்டவும். இதை நிழலில் உலர்த்தி பாலித்தினில் பத்திரப்படுத்தவும். தினமும் மூன்று குச்சிகள் உன் வீட்டு அறைகளை வாசப்படுத்தும். உன் உழைப்பில் உருவான ஊதுவத்திகளுக்கு இன்னும் வாசனை கூடும். நீ மிகவும் Busy என்றால் உன்னைச்சுற்றி இருக்கும் இன்னொருவருக்கு வாய்ப்பை கொடு. மலருக்கும் இன்னொரு மனிதருக்கும் மறுவாழ்வு கிடைக்கும்.
பிரியங்களுடன்
தெய்வானை

Sunday, 21 November 2021
அளவும் காலமும்

இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ
ஞாயிற்றுக்கிழமை வேலைகளோ
அடுத்த சனிவரை தேவையான
மாவு அரைத்து முடியலையோ
மதிய வேளை சாப்பாட்டுக்கு
மட்டன் பிரியாணி தயாரிப்போ
வாரம் முழுவதும் சேர்த்துவச்ச
அழுக்கு மூட்டை அலசலோ
அவசரமாக அழைப்புவந்து
அம்மா வீட்டுக்கு பயணமோ
அடுத்தமாத கல்யாணஅழைப்புக்கு
அன்பளிப்பு வாங்க ஷாப்பிங் கோ
இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ
ஆபீஸின் மெயிலுக்கு
ஆசுவாசமாய் பதில் டைப்பிங் கோ
அடித்து அடித்து திருத்தி
ப்ராஜக்ட் ரிப்போர்ட் ரைட்டிங் கோ
நெட்ப்ளிக்ஸ் ல் சீரியலோ
இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ

Friday, 19 November 2021
தோழிக்கு கடிதம் - 2
நீ ஒரு நல்ல பாடகி. குரல்வளம் அருமை.
நீ கேட்கும் , பாடும்,பாடல்களின் அருமை பெருமைகளை, பாடல் ஆசிரியர் வரிசையில், இசை அமைப்பாளர் வரிசையில் ஒரு பக்க அளவில் Samsung Notes ல் type செய்து Google blogger ல் Upload செய்யவும். Gmail id இருந்தால் போதுமானது. Google apps ல் Blogger app search செய்து போனில் Install செய்யலாம். மேலும் AnchorFM , Spotify இரண்டும் Playstore ல் கிடைக்கும். போனில் Download செய்யவும். Anchor FM ல் நீ பாடி பதிவுசெய்து Spotify ல் Publish செய்யலாம். Spotify link ஐ உன் Blog லும் ,D block லும் Share செய்யலாம். படிப்பது பிடித்தவர் Blog ஐயும், கேட்பதை பிடித்தவர் Spotify யும் தொடரட்டும். நேரம் கிடைக்கும்போது பழைய , புதிய, நம் காலத்திய பாடல் விமர்சனங்கள் சேர்த்துக்கொண்டே போகலாம். பாட்டில் உனக்கு பிடித்த வரிகள் பற்றி, அந்த சீனில் நடிகரின் Expressions பற்றி கருத்துகள் அனைத்தையும் பதிவுசெய். எப்படியும் உனக்கு 60 Followers கண்டிப்பாக கிடைப்போம். முதல் Follower ஆக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன். மில்லியன் Subscribers, மில்லியன் Views முதலில் எண் ஒன்றிலிருந்து தொடங்கப்பட்டவையே!. ரங்க நாயகி பட்டம் தாண்டி "பார்(ஆளும்)கவி" அடையாளம் வேண்டும் . WE ARE WAITING !!!

Thursday, 18 November 2021
தோழிக்கு கடிதம் - 1

Wednesday, 17 November 2021
பாஞ்சாலி

ஓடு.......தேடு.......

ஆனந்த கிறுக்கல்

Tuesday, 16 November 2021
அப்பா
ஊருக்குள்ள பிரச்சினையோ
உறவுக்குள்ள மனவருத்தமோ
ஓடி வந்து தீர்த்து வைப்பார்
ஊரெல்லாம் சுற்றி வந்த
சைக்கிளும் டீவிஎஸ் ம்
உம் அருமை மறந்திடுமா
வாழ்வெல்லாம் பயணித்த
உம்முடனே மறைந்திடுமா
சாந்தி வந்து சேருமோ
மீந்திருப்போர் வாழ்விலே
நிதானமும் நிம்மதியும்
சொத்து போல
சேர்த்து வைத்தார்
சொந்தங்களை கூட
சொத்தாகவே பார்த்தார்
அமரவைத்து புத்திமதி
இன்முகத்துடன் சொன்னார்!
ஒத்தை லட்சம் கேட்டால்
இரண்டாய் தந்துவிட்டு
இன்னும் வேண்டுமா,
உம்மையன்றி யார் கேட்பார்?
பரிசும் பணமுடிப்பும்
பண்டிகையில் யார் தருவார்?
எப்ப வர்ரே எப்ப வர்ரே
நூறுமுறை யார் கேட்பார்?
காண முடியாமலும்
பேண முடியாமலும்
கண்ணில் நீர் தந்து
விண்ணைத் தொட சென்றவரே
விம்முவது கேட்பீரோ
இப்படிக்கு
ஈற்றும்
பேற்றும்

ஆலமரம்

மரணத்தை வென்றார் உண்டோ

link mechanism

Monday, 15 November 2021
அப்பா
மூவாயிரம் மூளை வளர்த்து
மகனாய் மாண்பு வளர்த்து
தகப்பனாய் ஆயுள் நிறைத்து
முதுமையில் தவித்து நின்றார்!
ஊருக்குள்ள பிரச்சினையோ
உறவுக்குள்ள மனவருத்தமோ
ஓடி வந்து தீர்த்து வைப்பார்
காண முடியுமோ இனி
உம்மைப்போல் ஒருவர்?
பேசி முடியுமோ உம் பெருமை?
ஊரெல்லாம் சுற்றி வந்த
சைக்கிளும் டீவிஎஸ் ம்
உம் அருமை மறந்திடுமா
வாழ்வெல்லாம் பயணித்த
உம்முடனே மறைந்திடுமா
ஆசையாய் வளர்த்த மகன்
செட்டிநாட்டில் கொடிகட்ட
கடைசியாய் வந்த மகன்
கால்மேட்டில் காத்து நின்றார்
பூரணமும் கரையுமே
பரிமளமும் வாடுமே
சாந்தி வந்து சேருமோ
மீந்திருப்போர் வாழ்விலே
நிதானமும் நிம்மதியும்
சொத்து போல
சேர்த்து வைத்தார்
சொந்தங்களை கூட
சொத்தாகவே பார்த்தார்
சம்பிரதாய சந்தேகங்களும்
உறவு முறையின் குழப்பமும்
யாரிடம் கேட்பேனோ?
கருத்தில் நீங்குமோ
கற்று தந்த அத்தனையும்!
அமரவைத்து புத்திமதி
இன்முகத்துடன் சொன்னார்!
ஒத்தை லட்சம் கேட்டால்
பத்தாய் தந்துவிட்டு
இன்னும் வேண்டுமா,
உம்மையன்றி யார் கேட்பார்?
பரிசும் பணமுடிப்பும்
பண்டிகையில் யார் தருவார்?
போனில் பேசும் முதல் சொல்லில்
சளியா ம்மா யார் அறிவார்?
எப்ப வர்ரே எப்ப வர்ரே
நூறுமுறை யார் கேட்பார்?
காண முடியாமலும்
பேண முடியாமலும்
கண்ணில் நீர் தந்து
விண்ணைத் தொட சென்றீரே
விம்முவது கேட்பீர்
இப்படிக்கு
ஈற்றும்
பேற்றும்

Sunday, 14 November 2021
எங்கடீ போனீக

அன்பளிப்பு

Metrology & Instrumentation

Fluid Mechanics

Saturday, 13 November 2021
Basic Engineering Workshop Technology
https://drive.google.com/file/d/1kqqYwmyXMJtr_wEv67FH8io_KhoLNc00/view?usp=drivesdk

Fatigue failures in Pumps

Interview Questions for Mech.engineer

Wednesday, 10 November 2021
டேட்டா

Msc Pr Expt 6 Annealing

Monday, 8 November 2021
Mech.engg.Drawing Questions

கேள்வி இரண்டு வகை ?....?

Sunday, 7 November 2021
சீனமொழி கற்கலாமா?

Thursday, 4 November 2021
அப்பா எங்கே தோற்கிறார்?

Wednesday, 3 November 2021
Important Thermodynamic Concepts

நட்பூ...
மிதப்பதாய் இருந்தது
ஒருமணி நேரத்தில்
எவ்வளவு கதைகள்
அடிக்கடி கூடினால்
ஆயுளும் கூடும்
மனநலமும் கூடும்
ஆயுஷ்மான் பவ!!!
சுயநினைவில் இல்லை
போதையில் நடக்கிறேன்.
மிகையில்லை
அனுபவித்தவர்களுக்கு புரியும்
மற்றவர் அனுபவிக்க
முயற்சிக்கவும்
இப்படிக்கு
மேகங்களில் இருந்து
- தெய்வானை

Tuesday, 2 November 2021
Msc practical Experiment 8 Tempering a steel specimen

MSc Practical Experiment 7 Normalising the given Specimen

Msc chap 2 continue..... Corrosion Types and prevention

Multiple choice question

MSc Practical Experiment 5 Preparation of specimen for microscopic Examination

Msc chap 3 Types of Steel making process

Monday, 1 November 2021
Msc chap 1 Introduction to material science
MSc chap 1 Introduction to material science
Types of materials.

Msc chap 8 Fundamentals of Heat treatment

காயம்
காயங்களிலிருந்து
தேன்
வடியுமோ?
இன்பேச்சு
வருமோ?
பொதிமாடு
சிரிக்குமோ?
காவடிக்காரன்
நாட்டியம்
நயமோ?
சுமைகளை
குறை
சிறகு
விரிப்பேன்
சிரிக்க
சிங்காரிக்க
படிக்க
பாட
நடனமிட
சுற்ற
ஆயிரம்
உண்டு
ஆசை
எனக்கும்!

பி.......ரிவு
நிஜத்தில் நெருங்கவும் இல்லை
நினைவில் நீங்கவும் இல்லை
எழுத்தும் வலையும்
இணைத்தது சில காலம்
பிரிவு மீண்டும்.......
நினைவுகள் தொடரும்
நிழல்களாய்
அழுவதா சிரிப்பதா
சுகம் ஒன்று வந்தால்
மற்றது போகிறது
சமநிலையில் மனம்
வாழ்த்து வராது
நகைப்பு வராது
அரசியல் வராது
நடப்பு தெரியாது
வலிகள் தெரியாது
வானம் பார்த்த பூமியாய்
வாழ்க்கை கழியும்
.
.
.
.
பெரும் மூச்சுடன்
வாழ்க ! வளர்க!

முதிர்வு
பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால் இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...
-
Lines and Material conventions 1. Demonstration of various lines and material conventions 2. Sheet no 1. Draw the conventions of lines and...
-
What is Engineering Drawing? In engineering drawing, engineering-related objects like buildings, walls, electrical fittings, pipes, machin...
-
Orthographic Projection exercises Draw front view, top view ,side view of the following exercises Problem 1 Problem 2 ...
-
Technical Lettering Syllabus: 1. Introduction to lettering and its necessity. Demonstrate the construction details of Engli...