Showing posts with label குறள் கவிதைகள். Show all posts
Showing posts with label குறள் கவிதைகள். Show all posts

Friday 10 February 2023

குறள் : 1177

இதயம் 
இடம் மாறவும்
இளகவும்
இறுகவும்
காரணமான
கண்களே!
இன்று அழுது
புலம்புவதால்
மட்டும்
நீ செய்த பாவங்கள்
இல்லாமல் 
ஆகிவிடுமா?
அதானி வளர
மோதி காரணம்
ஆனதுபோல
என் துக்கம் வளர
நீதானே காரணம்
உண்மை வெளியானதும்
மோதியை போல
நீலிக்கண்ணீர்
வடிக்கிறாயே?
நன்றாக அழு
பாவம் குறையுமா
பார்க்கலாம்!

Thursday 9 February 2023

குறள் : 1176

கண்ணம்மாவும்
நானும் அவரை
கண்டோம்
மகிழ்ந்தோம்
சாக்லெட் தினம்
கொண்டாடி
அவள் கண்ணால்
சாப்பிட
நான் நாவால்
சுவைத்தேன்
அவரை அவள்
அதிகம் ரசித்தபோது
நான் கோபப்பட்டேன்
அவள் வருத்தப்பட்டாள்
அவரை பிரியும்நேரம்
அவள் கண்ணீர் சிந்த
நான் இரத்தம் சிந்தினேன்
என் சுகதுக்கத்தில்
பயணிக்கும் சகோதரி!

Tuesday 7 February 2023

குறள் : 1174

கடலே கடலே
உப்பு நீர் 
தருவாயா
கடனாக அல்ல
காசு தருகிறேன்
உப்பு தயாரித்து
டாடாவிற்கு
விற்கிறேன்
என் கண் வடித்த 
நீரெல்லாம்
ஆவியாகி
உப்பு மூட்டை
சேர்த்தேன்
விற்றேன்
இன்னும் 
வேண்டுமென
ரத்தன் கேட்கிறார்
என்னிடம்
கண்ணீர்
தீர்ந்துபோனது
இரண்டு லாரி
தண்ணீர்
இன்றைக்கே
அனுப்பி வை!

Comments : 

Sunday 5 February 2023

குறள் 1172

கால்சிலம்பை
கழட்டிதந்து
கோவலன் 
சாவுக்கும்
அவன் நீதிக்கும்
காரணமாகி
கலங்கி நின்ற
கண்ணகிபோல
காதலுக்கும்
பிரிவுக்கும்
காரணமான
கண்கள்
கலங்கி
நிற்பதேன்?
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
சாட்சியாகும்
நிலவைப்போல
என் கண்களும்
சேர்தலுக்கும்
விலகலுக்கும்
சாட்சியாவதேன்?

Saturday 4 February 2023

குறள் : 1171

கண்கள் 
என்ன பெண்பாலா?
பின்விளைவு
அறியாமல்
காதலித்துவிட்டு
பின்னர்
கண்ணீரும்
உகுப்பதேன்?
பெண்புத்தி போல
கண்புத்தியும்
பின்புத்தி தானோ?
விதை ஒன்று 
போட்டால்
சுரை ஒன்றா 
முளைக்கும்
இதுகூட 
அறியாத
அறிவிலியா
கண்கள்?
இன்பத்திற்குப்பின்
துன்பம்
அறியாயோ கண்ணே?
நீ என்ன 
மக்குப்பெண்ணா?

Thursday 2 February 2023

குறள்:1168

இரவும் நானும்
இணைபிரிந்த 
தோழிகள்!
அவளுக்கு
என்னைவிட்டால்
உறவொன்றும்
இல்லை!
ஆதலால்
இரவோடு
உறவாடி
கவலைகளை
போக்கிக்கொள்கிறேன்!
நிலாமகன்
மாதம் ஒருமுறைதான்
சந்திக்க வருகிறானாம்
இரவு குறைபட்டுகொண்டாள்!
என்னவனும்
அப்படித்தான்
ஆடிக்கொருதரம்
அமாவாசைக்கொருதரம்
வருகிறான்!

Comments:

குறள் : 1169

நீ வரப்போகிறாய்
என்று தெரிந்த
நாட்களிலும்
நீ போகப்போகிறாய்
என்று தெரிந்த
நாட்களிலும்
இரவு என்ன
இருபது மணிநேரம்
நீள்கிறது?
இரவு எதிரிக்கு
எவ்வளவு லஞ்சம்
தந்துபோனாய்
உன்னையே 
நினைத்திருக்க
யாவற்றையும்
மறந்துபோக
நீ இரவுக்கு
லஞ்சமாக
வைரநட்சத்திரங்களை
வாரி இரைத்து
போனாயோ?

Comments : 

Sunday 29 January 2023

குறள் 1165

இரண்டு நாட்கள்
எதிர்பாரா பிரிவு
என்னாச்சு
எங்கே போனே
உடல்நலம் சரியா
உள்ளநலம் சரியா
சாப்பிட்டாயா
தூங்கினாயா
ஏனையோர் நலமா
நூறுகேள்வி கேட்டாச்சு
பதில் ஒன்றும்
வரவில்லை
எரிச்சல் வந்தது
கோபம் வந்தது
ஏமாற்றம் வந்தது
தற்காலிகபிரிவே
இத்தனை துன்பம்
என்றால்
நிரந்தரப்பிரிவில்
நான் சப்தமின்றி
சாவேனோ?

Thursday 26 January 2023

குறள் 1162

மணிக்கொருமுறை
Hi அனுப்பினாள்
பேசுவதற்கு
விசயம் இருந்தாலும்
இல்லாவிட்டாலும்!
அவனுக்கு புரியுமா
Missing him என்று?
பதில்வரவில்லை
கொஞ்சநேரம் கோபம்
வெட்கமின்றி மீண்டும்
Busy ஆ கேட்கிறாள்
பாழாய்போன
காதல்தான்
பாடாய்படுத்துகிறது!
ரோசமும் இல்லை
வேஷமும் இல்லை!
சாப்பிட்டீங்களா
கேட்டாள்
நீ சாப்பிட்டாயா
திருப்பி கேட்பானென
ம்ஹும்.
யெஸ்ஸோடு
முடித்துக்கொண்டான்
How are you
கேட்டாள்
நீ நலமா 
கேட்பானென்று
ம்ஹும்.
Great உடன்
முடித்துக்கொண்டான்
அப்படி என்ன தான்
வேலையோ
அன்பிற்கு இடமின்றி
இழந்தபின்னும்
இறந்தபின்னும்
தரும் அன்பால்
காயங்கள்
மறைந்திடுமோ?


Comments : 

Wednesday 25 January 2023

குறள் 1160

நடந்து வருவாயா
படுத்து வருவாயா
நானொனறும் 
அறியேன்!
மகன் முகம்
பார்ப்பாயா
மண்ணுக்குள்
புதைவாயா
நானொன்றும்
அறியேன்!
வீரக்கதைகள்
நீ சொல்லக்கேட்டு
புளகாங்கிதம்
அடைவானா 
நம்மகன்
நடக்குமா இது
நானறியேன்
கண் அறுவை
செய்த அம்மா 
மருத்துவமனையில்
அப்பா கால்ஒடிந்து
வீட்டு வராண்டாவில்
அறிந்தாலும்
வரமாட்டாய்
அறிவேன் நான்
நீயில்லா சுமையும்
நீவிட்டுப்போன சுமையும்
கண்ணீரோடு
சுமப்பேன்
கவலையில்லை
ஆனால்.....
வந்துட்டேன்டி
கண்ணம்மா
என்று சொல்ல
திரும்பிவருவாய்
என்ற வரம் தந்து
பிரிந்துசெல்
மன்னவனே!

குறள் 1161

வன்முறையை
மறைக்கவே
முயற்சிக்கிறேன்!
பாழாய்போன
BBC காரன்
மேலும் மேலும்
பகுதிகள் விடுகிறான்
அதுபோல
காதல் துன்பமும்
மறைக்க முயன்றும்
மீண்டும் மீண்டும்
பெருகி கொண்டே
போகிறது......
இஸ்லாம் மீதான
வன்முறையும்
மாமன் மீதான
காதலும்
இரண்டும்
ஊற்றுநீர்!
தீர்வதே இல்லை!

Sunday 22 January 2023

குறள் 1158


கரோனா வந்து
ஆளுக்கொரு
மூலையில்
சுருண்டுவிழ
சுடுதண்ணீர்
வேண்டுமா
சாப்பாடு
வேண்டுமா
மருந்து
வாங்கிவரவா
காய்ச்சல்
குறைந்ததா
ஆக்சிஜன்
கிடைத்ததா
கேட்க நாதியில்லை
அயலூரில்
வாழ்வோருக்கு!


கல்யாண பந்தியில்
கேசரி சாப்பிட்டு
பலவருடம் ஆனது
குலதெய்வ
கோவிலில்
கிடா விருந்து
வந்தபோது
தேர்வுகள்
குறுக்கே வந்து
விருந்து தவறியது

தகப்பனுக்கு
நலக்குறைவு
சென்றுபார்க்க
இயவில்லை
..........
இனமில்லா நகரில்
சொந்தமில்லா  ஊரில்
வாழ்வது கடினம்தான்
ஆனால் அதைவிட
கடினம் அன்பர்
இல்லா வாழ்வு......



Saturday 21 January 2023

குறள் 1156

பிரியாதே
சொன்னாள்
ஐந்து மாதங்கள்
அதிகம் என்றாள்
........
வருகிறேன்
சொல்லி
கிளம்பினான்
பிரிந்தநாள்
செப்டம்பர் ஏழு
தேசம்காக்க
கங்கணம்
கட்டினான்
நாள்தோறும்
பயணம்
காடுகள்
மலைகள்
ஆறுகள்
வயல்வெளிகள்
கட்டிடங்கள்
மக்கள்
அத்தனையும்
கடந்தான்
வழியெங்கும்
பிரச்சினைகள்
தீர்வுகள்
அழுகைகள்
சிரிப்புகள்
எதிர்பார்ப்புகள்
கோபங்கள்
இத்தனை உணர்வுகள்
ஆளுகையில்
காதலை
காதலியை
மறந்தான்
இறுதியில்
ஐனவரி 30ல்
கடமை முடித்து
மனநிறைவோடு
வீடுதிரும்பினான்
காதலி மூலையில்
வேலைசெய்வதாக
பாவனை செய்தாள்
Ouchh.. சொல்லி
காலைதூக்கி
கட்டிலில் அமர்ந்தவனை
ஓடிவந்து
பாதம் நோக்கி
கண்ணீரால்
நனைத்தாள்
தாடியும் மீசையும்
தடவி அழுதாள்
போகாதே
சொன்னேன்
கேட்டியா
கல்மனம்
கொண்டது
உன்மீது
உனக்குள்
வாழும் என்மீது
உனக்கு
வலிக்கும்
என்றால்
எனக்கும்தானே
வலிக்கும்
மக்களை
நேசித்து
உன்னை
மறந்தாய்
உனக்குள்
வாழும்
என்னை மறந்தாய்
அன்பில் மாற்றம்
உணர்கிறேன்
ஐம்பது சதவீதம்
எனக்கு தந்தாய்
மீதி சதவீதம்
தேசத்திற்கு தந்தாய்
எனக்கான
உன்அன்பு
குறைந்துதான்
போனது
முன்னர்போல
நீயில்லை
புலம்பினாள்
ராகுலின் காதலி!!!

குறள் 1157

கழண்டுவிழும்
வளையல்
பொட்டு வைக்காத
நெற்றி
உறக்கமின்றி
சிவந்த கண்
பூச்சூடாத
தலைமுடி
பொருத்தமில்லாத
கலரில் உடை
கேட்ட கேள்விக்கு
தாமதமாக
வரும் பதில்
புன்னகை மறந்த
உதடுகள்
கோலம் இல்லாத
கூட்டப்படாத வாசல்
மிக சுத்தமான
அடுப்புமேடை

இவைகள் போதாதா
அவன் பிரிவை
எடுத்துசொல்ல???

Thursday 19 January 2023

குறள் 1155

உடைந்த
கண்ணாடி
ஒட்டாது
பூமி சேர்ந்த
மழைத்துளி
வானம்
திரும்பாது
கடந்துபோன
நொடிகள்
திரும்ப
கிடைக்காது
மகிழ்ச்சி
நிரம்பிய
இளமை
திரும்பவராது
கறந்தபால்
மீண்டும்
மடிசேராது

இயற்கை
அப்படியெனில்
பிரிந்தபின்னர்
நாமும் ஒன்று
சேர இயலாது
உன் பிரிவின்பால்
நான் இறந்து
விடக்கூடும்
பிறகு நாம்
சேரவே இயலாது
ஆகவே
என் உயிர்
காக்கும்
காவலரே
காதலரே
என்னை
பிரியாதீர்
பிரிந்தால்
நாம் ஒன்று
சேர்வது
கடினம்

Wednesday 18 January 2023

குறள் 1154

அஞ்சாதே!
சுகத்திலும்
சுகவீனத்திலும்
பலத்திலும்
பலவீனத்திலும்
உடன் இருப்பேன்
என என்னிடமும்
பாதிரியாரிடமும்
சொன்னாயே
மறந்தாயா
மாமனே!

பதவிஉயர்வும்
பணமும் மதிப்பும்
பெரிதென்று
எனைபிரிய
துணிந்தது
சரியா?

நடுஇரவில்
காய்ச்சல்வந்து
வாந்தியெடுக்கும்
குழந்தையை
மருத்துவரிடம்
அழைத்துசெல்ல
யாரை அழைப்பேன்
அழுதுகொண்டு
உனை நினைப்பேன்
அதை நீ உணர்வாயா?

புதுபுடவை
உடுத்தையிலே
அழகியென்று
ஆசைப்படும்
பக்கத்துவீட்டு
ஆண்மகனை
எவ்வாறு
எதிர்கொள்வேன்
Wouldlike to introduce you
to my club friends
will you come with me?
கேட்கும் சீனியரை
எத்தனைகாலம்
தவிர்ப்பது....
என் பயம்
அறிவாயா?

காய்கறி
நறுக்கிதந்து
காய்ந்ததுணி
மடித்துதந்து
உதவுவேன்
என்று மறுவீட்டு
விருந்தில்
மாமியாரிடம்
சொன்னாயே
குழந்தைபோல
என்தங்கை
பார்த்துக்கோ
சொன்னபோது
கவலைப்படாதே
மச்சான்
நான் இருக்கேன்
என்று அண்ணனிடம்
சொன்னதையும்
மறந்தாயோ?

காப்பதாய்
உறுதி சொன்ன
அத்தனையும்
மறந்து இன்று
பிரிந்துசெல்லல்
நியாயமா?

குற்றம்! குற்றமே!

Tuesday 17 January 2023

குறள் 1153

தூங்கி எழுந்ததும்
நான்பார்க்கும்
முதல்முகமும்
தூங்கும்முன்
தேடும்
கடைசிமுகமும்
நீ என
தெரிந்தும்
பிரிய நினைத்தல்
சரியா...

என்னடி
கேட்காமல்
சொல்லுடி
கேட்காமல்
மதிமயங்குவேன்
என தெரிந்தும்
தூரம் செல்வது
சரியா....

உறக்கத்திலும்
உன்தீண்டலை
ரசிப்பவள்
நீ அருகில்
இல்லாமல்
தவிப்பேன்
தெரியாதா....

உன் உஷ்ண
மூச்சுக்காற்று
பட்டுக்கொண்டே
இருக்கத்தானே
சிறியபடுக்கையே
வாங்கினேன்
மறந்தாயா...

இடப்பக்கம்
வலப்பக்கம்
திரும்பி படுத்தால்
முகம் காண
முடியாதென
நேராக
தூங்க சொல்வேன்
மறந்தாயா....

இத்தனை தெரிந்தும்
என் மனம் வாட
பிரிந்து செல்ல
நினைப்பது
எப்படி சரியென்று
விளக்கி சொல்!
Comments :

Monday 16 January 2023

குறள் 1151

(1)
அணிகலன் கேளேன்
பட்டாடை கேளேன்
பகட்டுவாழ்வு கேளேன்
செல்லாதே எனைவிட்டு!
கூரைவீடு கூழ்
கந்தை நீ போதும்
செல்லாதே எனைவிட்டு!
நீ சென்று வென்று
வரும்போது 
நான் இருப்பேனோ
இறப்பேனோ
வேண்டாம் அன்பரே
என்னோடு தங்கிவிடு!

(2)
பிரியும்போது
என் கண்ணும்
உன்னோடு வருமே!
அப்புறம் நான்
இந்த உலகை
எப்படி காண்பேன்?
துணிகள் நிரம்பிய
பெட்டிக்குள்
என் இதயம் 
ஒளிந்து வருமே!
பின் எப்படி
நான் வாழ்வேன்?
நீ பறக்கும்
விமானம் என்
மூச்சுக்காற்றில்
பயணிக்குமே
எங்ஙனம்
நான் வாழ்வது?
ஆதலால்
போகாதே!

குறள் 1152

கண்ணாடி ஜாரில்
கண்ட மிட்டாய்
கையில் கிடைத்து
தின்றபோது
தீர்ந்துவிடுமோ
கவலை போல!

விலை உயர்ந்த
சரக்கை விருந்தில்
குடிக்கும் ஏழை
அடுத்து எப்போ
வாய்க்குமோ என
கவலைபடுவது போல

அத்தான் தரும்
இன்பங்கள்
அடுத்தநாள்
தொடராதே என
சேரும்போதும்
கலங்கினாள்
Otherwise
தைரியசாலி!
Comments : 

Wednesday 11 January 2023

குறள் : 1147

ஏச்சு எருவாக
போட்டு
பேச்சு நீராக
ஊற்றி
வளர்க்கிறேன்
ஒரு செடி!
கருகுமா
வளருமா
காலம் சொல்லும்
கண்ணே
கூப்பிட்ட வாய்
சனியனே
என்றது
மை டார்லிங்
சொன்ன இதயம்
மயிராய்
நினைத்தது
கண்கள்
குளமானாலும்
கண்ணனை
விடமுடியவில்லை
இருப்பதா
இறப்பதா
காலன் சொல்லட்டும்!

Comments : 

சாரி

சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!